வித்யா கொலை தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை…!!

Read Time:3 Minute, 26 Second

vithya_001புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போதைய வட மாகாண பிரதி பொலிஸ மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வித்தியாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மஹாலிங்கம் சிவகுமாரை பொலிஸ் கட்டுபாட்டில் இருந்து விடுதலை செய்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் மிது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடத்தற்கு அமைய, மஹாலிங்கம் சிவகுமார் எனப்படும் பிரதான குற்றவாளியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காக பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு குற்றவாளியை பொலிஸ் பாதுகாப்பில் இருந்து விடுதலை செய்தமையினால் பொது மக்களின் போராட்டம் ஊடாக அரசாங்கத்தின் செல்வாக்கினை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என விசாரணை குழு அவதானம் செலுத்தி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் ராஜபக்ச ஆட்சியின் போது தெற்கில் சட்ட விரோதமான நடவடிக்கை மேற்கொள்வதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் ஆதரவு வழங்கிய பல சம்பவங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாடசாலை மாணவி வித்யாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சம்பவம் உட்பட நாட்டில் சிவில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரணை குழுக்கள் அவதானம் செலுத்தியுள்ளன.

பிரதான சந்தேக நபரான மஹாலிங்கம் சிவக்குமார் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் செயற்பாட்டாளர் மற்றும் போதைப்பொருள் வியாபாரங்கள் உட்பட சட்ட விரோதமான செயற்பாடுகள் பலவற்றுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

அதற்கமைய உத்தியோகபூர்வ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை, தெரிந்துக்கொண்டே பொது மக்களின் சமாதானத்தை உடைக்கும் செயல்களுக்கு ஆதரவு வழங்குவது உட்பட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது செய்யப்படவுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோர்வூட்டில் பாரிய மண்சரிவு – மக்கள் அச்சத்தில்…!!
Next post ரத்தம் வெளியேறும் நேரம்…!!