கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்காம் வாங்கும் ஆடம்பர வீடு: பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்…!!

Read Time:2 Minute, 39 Second

david_house_011சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் பிரித்தானியாவில் வாங்க இருக்கும் ஆடம்பர மாளிகை வீட்டின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
டேவிட் பெக்காம், விக்டோரியா தம்பதி இருவரும் புரூக்ளின் (16), ரோமியோ (13), க்ரூஸ் (10), ஹார்பர் (4) ஆகிய பிள்ளைகளுடன் லண்டனில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

31.5 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள அந்த வீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், டேவிட் பெக்காம் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க முடிவு செய்துள்ளார்.

தற்போது பிரித்தானியாவில் விற்பனைக்கு உள்ள விலை உயர்ந்த வீடுகளில் முதலாவதாக இருக்கும் Gloucestershire பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர வீட்டை வாங்க டேவிட் பெக்காம் முடிவு செய்துள்ளார்.

27 மில்லியன் பவுண்ட் விலை மதிப்புள்ள இந்த வீட்டில் 10 படுக்கை அறைகள் கொண்ட முதன்மை வீடும், 13 தனித்தனி வீடுகள், 11 பண்ணை வீடுகள் அமைந்துள்ளன.

மேலும், ஓய்வு நேரங்களில் கால்பந்து விளையாடுவதற்காக தனியாக ஒரு கால்பந்து விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள ஒரு சராசரி வீட்டை விட இது 24 மடங்கு அளவில் பெரியதாகும். கடந்த வாரத்தில் தனது குடும்பத்தினருடன் இந்த வீட்டை சுற்றி பார்த்து வந்துள்ள பெக்காம் இறுதியில் இந்த வீட்டை விலைக்கு வாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தன்னிடம் உள்ள 12 ஹெக்டேக்கர் அளவுள்ள எஸ்டேட் தோட்டத்தையும், பல சொகுசான கார்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு இந்த வீட்டை பெக்காம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

david_house_002

david_house_003

david_house_004

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிஞ்சு குழந்தையை மருத்துவமனையில் விட்டு தப்பிய தாய்: தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸ்…!!
Next post மண்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வாகனங்கள்: மீட்பு பணிகள் தீவிரம் (வீடியோ இணைப்பு)…!!