இந்த வார ராசிபலன் (16.11.07 முதல் 22.11.07 வரை)

Read Time:12 Minute, 27 Second

astrology_ani.gifமேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது: எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். கடன்களை அடைத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பீர்கள்.
பெண்களுக்கு: கணவரிடத்தில் சிறிது கருத்து வேறுபாடு ஏற்படும். உடல் நிலையில் சற்று பாதிப்பு ஏற்படும். கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் உயரதிகாரிகளின் உதவியால் முன்னேற்றம் கிடைக்கும். சிறு தடைகள் ஏற்பட்டாலும் வேலைகள் சிறப்பாக முடியும்.

ரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)
பொது: சிலரை நம்பி செய்யவிருந்த காரியங்கள் தள்ளிப்போகும். சிக்கனத்தை கையாண்டால் யாரையும் எதிர்பார்க்க தேவையிராது. திறமைகளை வெளிப்படுத்தினால் அபார வளர்ச்சி உண்டு.
பெண்களுக்கு: இல்லறத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
வேலையில்லாத பெண்களுக்கு வேலை தேடி வரும். உடல் நலமில்லாமல் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.
வேலை பார்ப்போருக்கு: பணியிடங்களில் தங்கள் திறமையைக் கண்டு அனைவரும் பாராட்டுவார்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேடி வரும். எதிர்பார்த்த இடங்களில் பணிமாற்றம் கிடைக்கும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பொது: சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் சற்று கவனம் தேவை. பொருளாதார புழக்கம் சற்று தாமதமாக வரும். நண்பர்களின் ஆலோசனையை கேட்டு நடந்தால் லாபம் கிடைக்கும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் தீர்ந்து மகிழ்ச்சி நீடிக்கும். குழந்தைகளின் படிப்புகளில் கவனம் தேவை. பெற்றோரின் வழியில் உதவிகள் கிடைக்கும்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகங்களில் பணிச்சுமைகள் அதிகரிக்கும். பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் சுமூகமாக நடக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைக்கும்.

கடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பொது: செய்யும் வேலைகளில் சிறு தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்தபடி வரவு இருக்கும். பணப்பொறுப்புகளில் அதிக கவனம் தேவை. எந்தவொரு செயலை செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும்.
பெண்களுக்கு: பிள்ளைகளால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கணவனுடன் அனுசரித்து போகவும். உடல்நலத்தில் சற்று அக்கறை தேவை.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் கஷ்டமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களுடன் சற்று கவனத்துடன் இருக்கவேண்டும். வீணாக பேசாமல் தங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொது: செய்யும் வேலைகளை திறம்பட செய்வதால் வருமானம் தடையின்றி கிடைக்கும். பணவரவு நிற்காமல் வரும். எந்தவொரு வேலையையும் செய்வதற்கு முன்னால் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
பெண்களுக்கு: குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள் இருந்தாலும் அனுசரித்து செல்லவேண்டும். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும். கணவருடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: வேலை செய்யுமிடத்தில் சக ஊழியர்களின் பாராட்டை பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நிதியுதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் முக்கிய தகவல் வந்து சேரும்.

கன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொது: நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். வருமானம் தொடர்ந்து வந்தாலும் எந்த சிரமமும் இருக்காது. நீங்கள் செய்யும் செயல்களில் முழுத் திறமையை வெளிப்படுத்தினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
பெண்களுக்கு: உறவினர்களின் நிகழ்ச்சிகளுக்கு செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்துடன் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். பிள்ளைகளின் படிப்பில் சற்று கவனம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகங்களில் தங்களின் திறமைக்கு முக்கிய பொறுப்புகள் தேடிவரும். வேலைப்பளு அதிகரித்தாலும், அதிக கவனம் தேவை. ஊதிய உயர்வு கேட்காமலேயே கிடைக்கும்.

துலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
பொது: நேர்மையுடன் நடந்து கொள்ளும் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் சிறிது தாமதாக கிடைக்கும். பண வரவு பலமடங்கு உயரும். எதிர்பாராமல் ஒரு நல்ல காரியம் திடீரென்று நடக்கும். சிறிய தடைகள் இருந்தாலும் வெற்றி உங்களுக்கே.
பெண்களுக்கு: ஆன்மீக பயணமாக வெளியூர் செல்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். எந்த வேலையையும் கவனத்துடன் செய்யவேண்டும்.
வேலை பார்ப்போருக்கு: பணி புரியும் இடங்களில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்து செய்ய நேரும். வேலைகளின் அவசரம் கருதி ஓய்வில்லாமல் உழைத்து அனைவருடைய பாராட்டையும் பெறுவீர்கள்.

விருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)

பொது: செயல்களில் திறமையை கொண்ட நீங்கள் சாமர்த்தியமாக பிறரை வேலை வாங்குவீர்கள். விரயங்கள் அதிகமாகும். பிறருடைய கோபத்திற்கு ஆளாகாமல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். சிரமத்துடன் காரியங்களை சாதித்து விடுவீர்கள்.
பெண்களுக்கு: குடும்பச் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுப்பீர்கள். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. நடவடிக்கையில் சற்று கவனம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் கொடுத்த வேலையை அதிகம் சிரத்தை எடுத்து செய்ய வேண்டி வரும். திறமையை வெளிப்படுத்திய பிறகு தான் பலனை பெறமுடியும்.

தனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொது: செய்யும் அனைத்து வேலைகளிலும் சுறுசுறுப்பாக இருக்கும் ஒரு வேலையை முடிக்க பல முறை அலைவீர்கள். பணவரவு உடனே கிடைக்காது. குடும்பத்தில் பெற்றோர்களின் உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு: இல்லறத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பொறுமையுடன் சென்றால் சந்தோஷம் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாருடன் சற்று எச்சரிக்கை தேவை.
வேலை பார்ப்போருக்கு: பணியிடத்தில் மேலதிகாரிகள் அதிக பணிச்சுமையை தருவார்கள். சக பணியாளர்களிடத்தில் சற்று எச்சரிக்கை தேவை.

மகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொது: பலருடன் கொண்ட பழக்கத்தால் செயல் சிறக்கும், வரவை விட எப்போதும் செலவு தான் அதிகமாக இருக்கும். சிறிய தடைகள் இருந்தாலும் பிற்பகுதியில் வெற்றி உறுதியாக கிடைக்கும்.
பெண்களுக்கு: குடும்பத்தின் சந்தோஷம் பொங்கும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்யவும். பெற்றோரிடத்தில் உதவிகள் கிடைத்தாலும் பண பற்றாக்குறை நீடிக்கும்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகங்களில் பொறுப்பான பதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிப்பதால், மதிப்பும் மரியாதையும் உயரும். பதவி உயர்வுகள் தானாக தேடி வரும்.

கும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொது: செய்யும் வேலைகளுக்கு உறவினர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருப்பார்கள். தாய் வழியில் உதவிகள் கிடைக்கும். பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு: கன்னிப் பெண்களுக்கு மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்ப பெண்கள் தங்களுக்கு தேவையான ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடத்தில் சந்தோஷம் தாண்டவமாடும்.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் தேவையான சலுகைகள் கிடைக்கும். பணிச்சுமைகள் அதிகமாக இருந்தாலும் தாங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொது: நீங்கள் எதிர்பார்த்த செயல்கள் வெற்றிகரமாக முடியும். வரவைவிட செலவுகள் பலமடங்கு அதிகரிக்கும். சற்று கவனத்துடன் இருந்தால் நல்லது. தக்க நேரத்தில் நண்பர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்.
பெண்களுக்கு: இல்லறத்தில் உள்ள மகிழ்ச்சியால் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் அதிக சந்தோஷம் அடைவீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் பணவரவுள்ள செயல்களை மட்டும் செய்ய முயற்சிப்பீர்கள். செய்யும் வேலையில் உற்சாகத்துடன் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிக்கலில் சிக்கிய கால் சென்டர் காதல்!! காதலித்தார் – கர்ப்பிணியாக்கினார் – கல்யாணம் செய்ய மறுக்கிறார்; போலீஸ் கமிஷனரை சந்தித்து காதலன் மீது பட்டதாரி பெண் புகார்!
Next post எஸ்.எம்.எஸ்.,சை செயற்கையாக திருத்தலாம் : மகாஜன் வழக்கில் செய்முறை விளக்கம்