கனடா பூங்காவில் சுற்றித்திரிந்த சிங்கம்: வீடியோ இணைப்பு…!!

Read Time:1 Minute, 36 Second

d050071a-cefb-4797-9f9b-dfdfc0c5d4f0_S_secvpfஹாலோவீன் கொண்டாட்டங்கள் களைகட்டும் வேளையில் மக்கள் தமது வீடுகள், செல்லப்பிராணிகள் என அனைத்தையும் பேய் போல பயங்கரமானவைகளாக மாற்றி பூதாகரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு நபர் தனது செல்ல நாய்க்கு சிங்கம் போல வேடமிட்டு அதை பூங்காவிற்கு அழைத்துச் சென்று அங்குவரும் மக்களையும் கொஞ்சம் மிரட்டி இருக்கின்றார்.

கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டெல்டா நகரில் இருக்கும் ‘பர்ன்ஸ் பாக்’ பூங்காவில் சில தினங்களுக்கு முன் சிங்கம் உலாவியது என கென் வெய்ஸ்னர் என்பவர் வீடியோவாக எடுத்து யூடியூபில் வெளியிட்டார்.

ஹாலோவீனுக்காக சிங்கத்தின் உடல் நிறத்தைப் போலவே இருக்கும் தனது பிட்புல் வகை நாயை, அசல் சிங்கம் போலவே அலங்காரம் செய்து உலவவிட்டு அதை வீடியோ பதிவும் செய்திருக்கிறார் கென்.

பின்புறத்தில் இருந்து பார்க்கையில் அச்சுறுத்தும் சிங்கம் போலவே காட்சியளிக்கும் இந்தச் செல்ல நாய் நம் மனதிலும் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அல்சர், மலச்சிக்கலை குணமாக்கும் சாமந்தி பூ…!!
Next post எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சாவு…!!