சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

Read Time:1 Minute, 59 Second

hp_cm_002-615x463வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்துகளை வாங்கிக் குவித்த வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேச முதல்வரான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரபத்ர சிங், அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்துகளை வாங்கிக் குவித்ததாக சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

எனவே சி.பி.ஐ.யின் நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வீரபத்ரசிங் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவரையும், அவரது மனைவியையும் கைது செய்யவும், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், சிபிஐ பொலிசார் உச்ச நீதிமன்றத்தில் அந்த தடையை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள், அந்த மனுக்கள் குறித்து பதிலளிக்கும்படி, ஹிமாச்சல பிரதேச மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலையை மெதுவாக கடந்த நபர்கள்: ஆத்திரத்தில் கத்தியால் சராமரியாக தாக்கிய பொலிசார்…!!
Next post மூன்று பாட்டில் ஒயினைக் குடித்துவிட்டு மூன்று நாட்கள் ஹேங்ஓவரில் திண்டாடிய பூனை…!!