செல்போனுக்காக ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடும் பாகிஸ்தானியர்கள்

Read Time:1 Minute, 20 Second

anihandy.gifபாகிஸ்தானியர்கள் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்பட்ட செல்போனுக்காக ரூ.4ஆயிரம் கோடி செலவிடுகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் ஆண்டுக்கு 3 முறை செல்போன்களை மாற்றிக்கொள்கிறார்கள். மொபைல் போன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டு இறுதியில் 7 கோடியே 70 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 25 லட்சம் பேர் புதிதாக செல்போன் வாங்குகிறார்கள். பாகிஸ்தானின் மொத்த இறக்குமதியில், செல்போனின் இறக்குமதி 4.4 சதவீதம் ஆகும். வெளிநாட்டு செல்போன் இறக்குமதிக்கு பெரும் பணம் செலவிடப்படுவதால், அது அன்னிய செலவாணியை பாதிப்பதால் செல்போன் கம்பெனிகள், பாகிஸ்தானில் உற்பத்தி செய்ய முன்வந்தால் அவர்களுக்கு சலுகைகள் வழங்கலாமா என்பது குறித்து அந்த நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் TRO சர்வதேசத் தலைவரும் அவரது மனைவியும் அமெரிக்காவில் அந்நாட்டுப் பொலிசாரால் கைது
Next post இங்கிலாந்தில்; இந்தியர்கள் கள்ளத்தனமாக குடியேறுவது எப்படி?: பாராளுமன்ற குழு விசாரணை செய்கிறது