தீபாவளி கொடுப்பனவு எங்கே? ஆர்ப்பாட்ட களத்தில் மலையக மக்கள்…!!

Read Time:3 Minute, 39 Second

akkarapatana_protes_004நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் தீபாவளி முற்பணம் இதுவரை வழங்கபடவில்லையென தெரிவித்து இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட அதிகாரியிடம் தீபாவளி முற்பணத்தினை 3ம் திகதி வழங்குமாறு கோரிய போதிலும் தோட்ட நிர்வாகம் அதனை வழங்க முடியாது என தெரிவித்துள்ளதோடு இதனை எதிர்வரும் 5ம் திகதி வழங்க முடியும் என தெரிவித்தது.

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறும் 1000 ருபா சம்பள உயர்வையும் காலம் தாழ்த்தாமல் மலையக அரசியல்வாதிகள் பெற்று தரவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரிகளும் தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக கூறிய பொய்யான வார்த்தைகளை இனிமேலும் நாங்கள் நம்பபோவதில்லை என தெரிவித்ததோடு,

சம்பள அதிகரிப்பினை பெற்றுகொடுக்காவிட்டால் நல்ல பாடம் புகட்டுவதாகவும் மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தினையும் உடனடியாக நிறுத்துவோம் என இவர்கள் தெரிவித்தனர்.

தீபாவளி முற்கொடுப்பனவு வழங்கக்கோரி பொகவந்தலாவை தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் 10 மணி வரை நடைபெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொகவந்தலாவை – கிலானி, மோரா மற்றும் தெரெசியா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்காக மக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், தமக்கு தீபாவளி முற்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என இந்த மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, தமக்கான சம்பள உயர்வை பெற்றுத்தருவதாக மலையக அரசியல்வாதி கடந்த 7 மாதாங்களாக ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், தமக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் காலங்களில் உறுதிமொழிகளை வழங்கும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்று அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் அதனை நிறைவேற்றுவதில்லை என மலையக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கவேனும், தோட்ட நிர்வாகத்திற்கு அரசியல்வாதிகள் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் இந்த மலையக மக்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சம்பவம்..!!
Next post பிஞ்சு குழந்தையை பக்கெட்டுக்குள் அடைத்து வைத்த தந்தை: நல்வழிப்படுத்தவே செய்ததாக வாதம் (வீடியோ இணைப்பு)…!!