பிரெஞ்ச் நிறுவனத்தை வாங்குகிறது விப்ரோ?

Read Time:3 Minute, 35 Second

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் கன்சல்டன்சி நிறுவனம், `கேப்கெமினி’யை , விப்ரோ நிறுவனம் வாங்கப்போவதாக தெரிகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்நிறுவனம், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் சேவையில் பெரும் லாபம் சம்பாதித்து வருகிறது. இதன் பங்குகள், ஐரோப்பிய பங்குச் சந்தையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தை வாங்க பல நாட்டில் உள்ள நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்தியாவில் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனம், இந்த பிரான்ஸ் நிறுவனத்தை வாங்கப்போவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை என்று இன்போசிஸ் கூறிவிட்டது. இப்போது, இந்நிறுவனத்தை விப்ரோ நிறுவனம் வாங்க முயற்சி செய்வதாக கம்ப்யூட்டர் நிறுவன வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இப்படி ஒரு பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தையில், சமீபத்தில், இந்நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவீதம் உயர்ந்துவிட்டது. பிரான்ஸ் நிறுவனத்தை விலைக்கு விற்கும் விவகாரத்தில், அமெரிக்க இடைத்தரகு நிறுவனம் ஒன்று தான் செயல்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள், இந்த புரோக்கர் நிறுவனத்திடம் பேசி வருகின்றன. ஆனால், விப்ரோ நிறுவன தரப்பில் கூறுகையில், `இது வெறும் வதந்தி தான். இன்னும் நாங்கள் எந்த பேச்சும் ஆரம்பிக்கவில்லை’ என்று கூறபட்டது.

ஐரோப்பிய நாடுகளில் சாப்ட்வேர் சேவை செய்து வந்த `கேப்கெமினி’ நிறுவனத்துக்கு கடந்த ஐந்தாண்டாக வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம், இந்திய நிறுவனங்களின் சாப்ட்வேர் சேவை தான். இந்திய நிறுவனங்களிடம் சாப்ட் வேர் சேவை பெறுவதற்கு செலவு குறைவாக உள்ளதால், பல நிறுவனங்கள், `கேப்கெமினி’யின் சேவையை நிறுத்தி விட்டன. இந்நிலையில், தன் சாப்ட்வேர் சேவை திட்டங் களை மாற்றியமைத்தது இந்நிறுவனம்.

இதையடுத்துத்தான், இந்திய நிறுவனம் ஒன்று, இந்த பிரான்ஸ் நிறுவனத்தை வாங்க உள்ளதாக சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. முப்பது நாடுகளில் சேவை செய்து வரும், `கேப்கெமினி’ நிறுவனத்தை வாங்க விப்ரோ முயற்சி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் சாப்ட்வேர் சேவையில் அதிக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் மூன்றாவதாக உள்ள, `விப்ரோ’ நிறுவனம், கடந்த காலாண்டில், 4,785 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தீபாவளி வாரமான கடந்த வாரத்தில் சூர்யாவின் வேல் முதலிடத்தைப் பிடித்துள்ளது: கோலிவுட் டாப் 5 படங்கள்
Next post குண்டாக இருக்கிறீர்களா? நியூசி., செல்ல முடியாது!!