காவ­ல்நிலையத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் பலாத்காரம்; பொலிஸ் சார்ஜன்ட்க்கு சிறைத்­தண்­டனை…!!

Read Time:3 Minute, 41 Second

Vector illustration of a man lock up in prisonவென்­னப்­புவ தோப்­புவ பொலிஸ் காவ­ல­ரணில் வைத்து 40 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயை பல­வந்­த­மாக வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் தொட­ரப்­பட்ட வழக்கில் அச்­ச­மயம் வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்­றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீதான குற்றம் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அவ­ருக்கு கடும் வேலை­யுடன் கூடிய பத்து வருட சிறைத்­தண்­டனை வழங்கி சிலாபம் மேல் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. அத்­துடன் அவ­ருக்கு ஏழா­யி­ரத்தி ஐநூறு ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த தண்­ட­னை­க­ளுக்கு மேல­தி­க­மாக பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு இரு­பத்தையா­யிரம் ரூபா நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும், இந்தத் தொகை மற்றும் அப­ராதத் தொகை என்­ப­வற்றை செலுத்தத் தவறின் அதற்­காக ஆறு மாதங்கள் மேலும் இலகு சிறைத் தண்­டனை அனு­ப­விக்க நேரிடும் எனவும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பஸ்­யால கொட்­டு­வெல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த 58 வய­து­டைய ஒரு­வ­ருக்கே இவ்­வாறு தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் பொலிஸ் சார்­ஜன்­டான இவர் இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து பணி­நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்­ததோடு அதன் பின்னர் பன்­னல பிர­தே­சத்தில் தொழி­லா­ளி­யாகப் பணி­யாற்றி வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தினம் ஒன்றில் வென்­னப்­புவ பொலிஸ் பிரிவின் தோப்­புவ பொலிஸ் காவ­ல­ரணில் வைத்து அப்­போது 40 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாய் ஒரு­வரை பல­வந்­த­மான முறையில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் இவ்­வ­ழக்குத் தொட­ரப்­பட்­டிருந்தது. சம்­ப­வ­தினம் இரவு குற்றம் சுமத்­தப்­பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்­ட­பிள்­க­ளுடன் சிலாபம் கொழும்பு வீதியின் வைக்கால் தோப்பு பாலத்தின் அருகில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் காவ­ல­ரணில் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்­துள்ளார். இந்­நே­ரமே இவ்­வாறு அங்கு வைத்து குறித்த பெண் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்ட சாட்­சி­யங்களின் பிர­காரம் குற்­ற­வாளிக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல்ரணராஜாவினால் அவருக்கு இவ்வாறு தண் டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61 ஆவது இடம்…!!
Next post நீங்க எலுமிச்சை ஜூஸ் அதிகமா குடிப்பீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க…!!