பெண்களிடம் `ஐ லவ் யு’ சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி?

Read Time:3 Minute, 5 Second

anilove5.GIFகவர்ச்சியால் பெண்களை மயக்கும் திறன், `செக்ஸ்’ உந்துதலுக்கு ஆளாகும் குணம் ஆண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. எப்படி என்பது குறித்து ஆராய்ந்ததில், ஆண்களின் குரோமோசோம் கட்டுமானம் எளிமையாக அமைந்துள்ளதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள்: ஆண்களுக்கும், பெண்களுக்கும் குரோமோசோம்களில் வித்தியாசம் உள்ளது. ஆண்களின் செல், `எக்ஸ்’ மற்றும் `ஒய்’ ஆகிய இரண்டு குரோமோசோம்களால் ஆனவை. பெண்களுக்கு இரண்டு குரோமோசோம்களுமே, `எக்ஸ்’ வகையை சேர்ந்தவை. பெரும்பாலும் `எக்ஸ்’ குரோமோசோம்கள் தானும் இயங்கி, மற்ற குரோமோசோம்களுடனும் இணைந்து இயங்கும் தன்மை கொண்டவை. இதனால், இது தன் பணியை சிக்கலாக்கிக் கொள்கிறது. இது தான் பெண்களின் குணமாக அமைந்து விடுகிறது. ஆண்களின் செல்லில் ஒரே ஒரு `எக்ஸ்’ குரோமோசோம் தான் உள்ளது. இந்த குரோமோசோம், தான் இயங்குகையில், இன்னொரு குரோமோசோமுடன் இணைந்து இயங்க வாய்ப்பில்லாமல் போகிறது.

ஏனெனில், இதனுடன் உள்ள `ஒய்’ குரோமோசோம் ஒரு சில மரபணுக்களையே கொண்டுள்ளது. எனவே, விஷயத்தை சிக்கலாக்க வாய்ப்பில்லை. இது தான், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பரம்பரையான அடிப்படை குணம் மாறுவதற்குக் காரணம். முடிவெடுப்பதில் ஆண்கள் `வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு’ என்று இருப்பதற்கு இதுவே காரணம்.

இதன் அடிப்படையில் தான், தான் விரும்பும் பெண்ணிடம், `ஐ லவ் யு’ வை வெளிப்படையாக, அதிக நாள் கடத்தாமல் சொல்லி விடுகின்றனர். அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வகையில், `செக்ஸ்’ உந்துதலுக்கும் ஆளாகின்றனர். ஒரு குழந்தையின் பாலை நிர்ணயிப்பது தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்படும் குரோமோசோம்களின் அமைப்பு தான் என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே, பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை நிர்ணயம் செய்வது, தாய் குரோமோசோம்களின் ஆதிக்கம் அதிகமா, தந்தையின் குரோமோசோம்களின் ஆதிக்கம் அதிகமா என்பதைப் பொறுத்தே அமைகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நிருபருக்கு அடி-ஆர்த்தி குடும்பம் கைது
Next post காரை ஏற்றினாரா சல்லு? மீண்டும் பரபரப்பு! : மாடல் அழகியால் தப்பினார்