விஜய் படத்தில் மீனா மகள் அறிமுகம்…!!

Read Time:1 Minute, 43 Second

meena-500x500விஜய் நடித்து வரும் அவரது 59–வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. அட்லீ இயக்கும் இந்த படத்தில் சமந்தா, எமிஜாக்சன், சத்யராஜ், மகேந்திரன், சுனைனா, பிரபு, ராதிகா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

கிரைம் கலந்த ஆக்‌ஷன், திரில்லர் படமாக இது உருவாகிறது. நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறாள். விஜய் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்றுள்ள இந்த படத்துக்கு ‘காக்கி’ , ‘சந்திரியன்’, ‘வெற்றி’ என்று பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் பஸ்ட்லுக், டீசர் ஆகியவை தயாராகி வருகின்றன. இவற்றை தீபாவளி தினத்தில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள். அவர்களுடைய ஆவலை நிறைவேற்றும் வகையில் ஏற்பாடுகளை செய்யும் படி இயக்குனர் அட்லீ மற்றும் படக்குழுவினரிடம் விஜய் கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி தீபாவளி தினத்தில் விஜய் புதிய படத்தின் பஸ்ட்லுக், டீசர் ஆகியவை வெளியாகும் என்று தெரிகிறது. படத்தின் பெயரும் இதற்குள் முடிவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம்…!!
Next post கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்…!!