குழந்தை பராமரிப்புக்காக மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுமுறை…!!

Read Time:3 Minute, 23 Second

father_leave_001மனைவி இல்லாத ஆண் மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்காக 2 ஆண்டு விடுமுறை அளிக்க 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்ற அமைக்கப்பட்ட 7–வது சம்பள கமிஷனின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

7–வது சம்பள கமிஷன் அறிக்கையில், மத்திய அரசு ஆண் ஊழியர், மனைவி இல்லாமல் வாழ்பவராக இருந்தால், அவருக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்கிறோம்.

இதில், முதல் 365 நாட்கள், 100 சதவீத சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

மீதி 365 நாட்கள், 80 சதவீத சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டும் பலன்அடையும் வகையில், இதில் ஏதேனும் அளவுகோலை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 6வது சம்பள கமிஷன், பெண் ஊழியர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் (730 நாட்கள்) குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க முதல்முறையாக சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7வது சம்பள கமிஷன் அறிக்கையில் உள்ள முக்கிய பரிந்துரைகள்:

ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு.
அடிப்படை ஊதியத்தில் 16% உயர்வு. படிகளில் 63% உயர்வு. ஆண்டுக்கு 3% ஊதிய உயர்வு.
52 படிகள் ரத்து, 36 படிகள் இதர படிகளோடு இணைப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயம்.

அதிகபட்ச ஊதியம் ரூ.2.5 லட்ச மாக நிர்ணயம், குரூப் இன்சூரன்ஸ் தொகை ரூ.50 லட்சமாக உயர்வு. இதனால் பிரிமியம் பிடித்தம் உயரும், ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத உயர்வு.
தனியார் நிறுவனங்கள் போன்று பணித்திறன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வட்டியில்லா கடன்கள் ரத்து.

பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.

ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் ராணுவத்தை போன்று துணை ராணுவ படைகளிலும் அமல்.

தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், மின்வாரியம், விமான நிலையங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு ரூ.4.50 லட்சம் ஊதியம்.

ராணுவ பணிக்கு இளைஞர்களை ஈர்க்க ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் ஓராண்டு மானியக் கல்வி.
ராணுவ குறுகிய கால சேவைகளில் பணியாற்றும் அதிகாரிகள் 7 முதல் 10 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் ஓய்வுபெற சிறப்பு சலுகை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ள நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி –களுவன்கேணியில் சம்பவம்..!!
Next post நியூசிலாந்து பனிமலையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 7 பேர் பலி…!!