கடத்தப்பட்ட மனைவியை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றத்தில் கணவன் வழக்கு

Read Time:2 Minute, 40 Second

கடத்தப்பட்ட தனது காதல் மனைவியை மீட்டுத் தரக் கோரி கணவன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். விருநகர் ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்தவர் முத்துபாண்டி. இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக உள்ளார். மதுரையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் தீபாவும் முத்துப்பாண்டியனும் காதலித்து வந்தனர். இந்தக் காதலுக்கு தீபாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் மதுரையில் திருமணம் செய்து கொண்டனர். இதனால் பெண் வீட்டார் காதல் தம்பதிகளுக்கு மிரட்டல் விடுத்ததால் பயந்து போன தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் போலீசார் பாதுகாப்பு தர மறுத்துவிட்டனர். இதனால் இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி சாத்தூரில் திருமணத்தை பதிவு செய்து, சாத்தூர் டிஎஸ்பியிடம் பாதுகாப்பு வேண்டி மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதியன்று சாத்தூரில் வழக்கறிஞரை பார்க்க முத்துப்பாண்டியும், தீபாவும் நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த ஒண்டிப்புலிநாயக்கனூரைச் சேர்ந்த செல்வம், திருப்பாலை பஞ்சாயத்து எழுத்தாளர் சந்தானம் ஆகியோர் தீபாவை கடத்திச் சென்று விட்டனர்.

போலீசாரிடம் புகார் கொடுத்தும் பயனில்லாததால் கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார் முத்துப்பாண்டியன்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபாதேவன், நாகமுத்து ஆகியோர் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்கும்படி விருதுநகர் மாவட்ட எஸ்பி மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post படமாகும் ரஜினி சொன்ன பாபா கதை!
Next post காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்