10 ஆண்டுகளாக கேம் விளையாடிய பெண்! வீடியோ கேம் மையத்தில் இருந்து மீட்பு…!!

Read Time:2 Minute, 7 Second

china_video_game_002சீனாவில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண்ணை வீடியோ கேம் மையத்தில் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.
சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான ஜியோ உங் என்ற இளம் பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, வீடியோ கேம் ஆட்டத்தில் உள்ள ஈர்ப்பால் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து ஜியோவின் பெற்றோர் பொலிசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அவரை தீவிரமாக தேடியுள்ளனர்.

ஆனால் பொலிசாரிடம் அவர் சிக்காததால், ஜியோ உங் இறந்திருக்கலாம் என்ற முடிவிற்கு பெற்றோர் வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், இணைய மையங்களை திடீர் சோதனை மேற்கொண்ட பொலிசார், போலி அடையாள அட்டை வைத்திருந்த குற்றத்திற்காக ஜியோ உங்கை கைது செய்து விசாரித்துள்ளனர்.

விசாரணையின் முடிவில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர் என்பது தெரிய வந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய ஜியோ கடந்த 10 ஆண்டுகளாக இணைய மையங்களிலேயே தங்கி தமக்கு பிரியமான விளையாட்டை ஆடி பொழுதை கழித்துள்ளார்.

இதனையடுத்து, போலி அடையாள அட்டை வைத்திருந்த குற்றத்திற்காக 1000 யுவான் அபராதம் விதித்த பொலிசார், அவரை பெற்றோருடனும் சேர்த்து வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்பியுடன் பலி: கூவம் ஆற்றில் மூழ்கிய பெண் உடல் மீட்பு…!!
Next post மருத்துவர்களின் அலட்சியம்: ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் அவலம்…!!