நுவரெலியா லவர்ஸ் லீப் தோட்டத்தில் மண்சரிவு…!!

Read Time:1 Minute, 30 Second

imagesநுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லவர்ஸ் லீப் தோட்டத்தில் இன்று காலை 5 மணிக்கு ஏற்பட்ட மண்சரிவால் 04 வீடுகளின் சுவர்கள் சரிந்து விழுந்துள்ளன.

இதன்போது வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமாகியுள்ளதுடன் 24 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

பாதிக்கபட்டவர்களை தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கபட்ட லயன் தொகுதி ஏற்கனவே வெடிப்புற்று காணப்பட்டதாகவும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையென பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு 40 வருடங்களுக்கு முன்பு இக்குடியிருப்பு மாட்டு பட்டியாக இருந்ததாகவும் தோட்டத்தில் வீடுகள் இல்லாத காரணத்தினால் இதனை தமக்கு வழங்கியதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கபட்ட மக்களுக்கு இதுவரையிலும் நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென இவர்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.மீசாலையில் வீட்டு வளாகத்தில் மோட்டார் குண்டு..!!
Next post பிட்டகோட்டை சந்தியில் வேன் விபத்து…!!