குழந்தைகளுக்கான தவழும் போட்டி…!!
குழந்தைகளுக்கான தவழும் போட்டியொன்று ஜப்பானில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
யோக்கோஹமா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 601 குழந்தைகள் பங்குபற்றின.
உலகின் மிக அதிக எண்ணிக்கையான குழந்தைகள் பங்குபற்றும் தவழும் போட்டி இதுவாகும்.
10 அடி தூரம் கொண்ட இப்போட்டியில் 6 மாதங்கள் முதல் 16 மாதங்கள் வரையான வயதுடைய குழந்தைகளை பங்குபற்றச் செய்யுமாறு ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சில குழந்தைகள் போட்டி முடிவடையும் எல்லைக்கோட்டில் நின்றிருந்த தமது பெற்றோரை நோக்கி வேகமாக தவழ்ந்தன.
வேறு சில குழந்தைகள் ஆரம்ப இடத்திலேயே அமர்ந்துகொண்டன. சில குழந்தைகள் வீறிட்டு அழுதன.
601 குழந்தைகள் இப்போட்டியில் பங்குபற்றியமை புதிய கின்னஸ் சாதனையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சீனாவில் இத்தகைய போட்டியொன்றில் 451 குழந்தைகள் பங்குபற்றியமையே முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது.
Average Rating