கடற்கரையில் காதல் சல்லாபம் : கண்காணிக்க நவீன கேமராக்கள்

Read Time:3 Minute, 22 Second

ஜென்சென் பீச் : கடற்கரையில் இனி காதல் சல்லாபங்கள் செய்ய முடியாது. இதை தடுக்கும் வகையில் நவீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அழகிய கடற்கரையான ஜென்சென் பீச்சில், காதலர்கள் சல்லாபம் வெகு சாதாரணம். உடலுறவு வைத்துக்கொள்வதைத் தவிர, சரசத்தின் உச்சத்துக்கே காதலர்கள் செல்வது உண்டு. இதனால், அங்கு வரும் மற்றவர்கள் அருவருப்படைய நேரிடுகிறது. அது மட்டுமின்றி, சில காதலர்கள், கடற்கரை குளியலறையில் உறவு வைத்துக் கொள்வதும் சகஜமாகி வருகிறது. இதை தடுக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து வரும் கண்காணிப்பில் ஏராளமான ஜோடிகள் கைது செய்யப்பட்டு, அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், காதல் ஜோடிகளின் சில்மிஷங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இனி காதலர்கள் உணர்ச்சி வசப்பட்டு முத்தமிட்டால் கூட, உடனடியாக எச்சரிக்கப்படுவர். காதலர்கள் முத்தமிட் டால் கூட, அவர்கள் முத்தமிடும் போது, பிளாஷ் லைட் அடித்து படம் பிடிக்கப்படுவர்; இதுபோன்ற செயல்கள் கூடாது என்று எச்சரிக்கப்படுவர். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். இதற்காக பேசும் வீடியோ கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு வருவதாக மார்டின் கவுன்டி கமிஷன் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த கேமராக்கள் கம்ப்யூட்டர் மூலம் இயங்கும். தொலையுணர்வு முறையில் செயல்படும் இந்த கேமராக்களில், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட குரல்கள், காதலர்கள் சில்மிஷம் செய்யும் போது தானாக ஒலிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடியது. காதலர்கள் நெருக்கமாகும் போதே, அதை இந்த கேமராக்கள் உணர்ந்து கொண்டு, எச்சரிக்கை செய்யும். அப்போது, தாங்கள் கண்காணிப்பில் இருப் பதை அவர்கள் தெரிந்து கொண்டு, உஷாராகி விடுவர்.

இந்த கேமராக்கள், மரங்கள், விளக்கு கம்பங்கள் போன்றவற்றில் பொருத்தப் படும். எச்சரிக்கை குரல் ஒலித்து முடிந்த ஒரு நிமிடத்திற்குள், பிளாஷ் ஒளியை வெளியிடும். இந்த கேமராக்கள் சூரிய ஒளியில் இயங்கக்கூடியவை. கலிபோர்னியாவில் உள்ள, “கியு ஸ்டார் டெக்னா லஜி’ என்ற நிறுவனம், இந்த கேமராக்களை தயாரித்துள்ளது. ஒவ்வொரு கேமராவின் விலை ரூ.இரண்டே கால் லட்சம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தெற்கின் தாக்குதல்களுக்கு அரசாங்கத்திற்கு எதிரான கட்சி ஒத்துழைப்பு. -லெப்டினன்ட் ஜெனரல். சரத் பொன்சேகா!!
Next post கருச்சிதைவினால் பெண் மரணம்: ஆயுர்வேத வைத்தியர் கைது!!