பிரிட்டிஷ் ராணி திருமணம் குறித்து தவறான தகவல்

Read Time:1 Minute, 32 Second

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் திருமணம் கத்தோலிக்க திருச்சபையில் நடைபெற்றதாக வெளியான தகவல் தவறானது என நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், எலிசபெத் ராணி-பிலிப் ஆகியோரின் 60-ம் ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட்டது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். அப்போது வெளியான அறிக்கை ஒன்றில், ராணி எலிசபெத்தின் திருமணம் கத்தோலிக்க திருச்சபையில் நடைபெற்றதாக கூறப்பட்டிருந்தது. இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக நியூசிலாந்து அரசு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்திலேயே ராணி எலிசபெத்தின் திருமணம் நடந்ததாகவும், திருச்சபையில் திருமணம் நடந்ததாக வெளியான தகவல் தவறானது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் விதிகள், இங்கிலாந்து ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்சை விட ஷாப்பிங் செல்வதில் பிரிட்டன் பெண்களுக்கு அதிக ஆர்வம்
Next post காதலனுக்கு அசிட் வீசிய காதலி: பொலிஸாரினால் கைதாகி பிணையில் விடுதலை