கைகள் இல்லை,கால்கள்,கவலையும் இல்லை…!!

Read Time:13 Minute, 20 Second

13585_nick-vujicicஉடலில் ஏதேனும் மிகச்­சி­றிய குறை­பா­டுகள் இருந்­தால்­கூட அதற்­காக கவ­லை­ய­டை­ப­வர்கள் கோடிக்­க­ணக்­கானோர் உள்­ளனர்.

தலை­மயிர் கொட்­டு­கி­றது. வழுக்கை விழு­கி­றது, உடல் பரு­மனாக உள்­ளது, மிக மெலி­வாக உள் ­ளது, உய­ர­மாக இல்லை. நல்ல நிற­மாக இல்லை, வசீ­க­ர­மான தோற்றம் இல்லை என்­றெல்லாம் கவ­லைப்­ப­டு­ப­வர்­களைப் பார்த்­தி­ருப்போம்.

ஆனால், அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வ­ருக்கு இரு கைகளும் இல்லை. கால்­களும் இல்லை. ஆனால், இப்­போது அதற்­காக அவர் கவ­லை­ய­டை­யவும் இல்லை. பூரண ஆரோக்­கியம் கொண்ட மனி­தர்கள் பலர் செய்யத் துணி­யாத சாக­சங்­க­ளிலும் அவர் ஈடு­ப­டு­கிறார்.

உலகில் மிக அதிக தன்­னம்­பிக்கை கொண்ட மனி­தர்­களில் ஒரு­வ­ராக அவர் விளங்­கு­கிறார். மற்­ற­வர்­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக திகழும் அவரின் உரை­களை கேட்­ப­தற்கு பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் திரள்­கின்­றனர்.

அந்த இளைஞர் தான் நிக் வுய்சிக். (Nick Vujicic) சேர்­பிய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த நிக் வுய்சிக், 1982 ஆம் ஆண்டு டிசெம்பர் 4 ஆம் மெல்பேர்ன் நகரில் பிறந்­தவர். இன்று அவரின் 33 ஆவது பிறந்த தினம்.

நிக் வுய்சிக் பிறக்­கும்­போது இரு கைளும் இருக்­க­வில்லை. கால்­களும் இருக்­க­வில்லை. இடது கால் மிகச்­சிறிய அளவில் துருத்­திக்­கொண்­டி­ருந்­தது. போகோ­மே­லியா எனும் அரிய குறை­பாடு கார­ண­மாக அவர் கை, கால்கள் இல்­லாமல் பிறந்தார்.

1982ஆ-ம் ஆண்டு டிசம்பர் 4ஆ-ம் திகதி, மெல்­பேர்னில் ஒரு மருத்­து­வ­ம­னையில் நிக் பிறந்­த­போது அக்­கு­ழந்­தையை பார்த்து மருத்­து­வர்­களே அதிர்ச்­சி­ய­டைந்­தனர். மயக்கம் தெளிந்து தனது நிக் வுய்­சிக்கை பார்த்த அத் தாய் கண்­ணீர்­விட்டு அழுதார். இத்­த­னைக்கும் அத்­தா­யான துஸி­காவும் ஒரு தாதி. எனினும், துஸி­காவும் அவரின் தந்தை போரிஸும் அக்­கு­ழந்­தையை வளர்க்கத் தீர்­மா­னித்தார்.
கைகள், கால்கள் இல்­லா­தது தவிர, நிக்­குக்கு வேறு எந்த உறுப்­பு­க­ளிலும் பிரச்சினை இல்லை. துருத்­திக்­கொண்­டி­ருந்த சிறிய இட­து­காலில் சேர்ந்­தி­ருந்­த ­இ­ரண்டு விரல்­களை மருத்­து­வர்கள் பிரித்துவிட்­டனர்.

தான் வித்­தி­யா­ச­மாக பிறந்த நபர் என்­பதை உண­ராத நிக் வுய்சிக் இள­மை­யி­லேயே மகிழ்ச்­சி­யாக காணப்­பட்டார். மூன்று வய­தி­லேயே அவ­ருக்கு ஸ்கேட்டிங் போர்டில் படுக்கவைத்து நகரப் பழக்­கினர் பெற்றோர். தானி­யங்கி சக்­கர நாற்­காலி ஒன்றைத் தானாக இயக்­கவும் அவர் கற்­றுக் ­கொண்டார்.

ஆனால், அவர் வளர வளர, தனது தம்பி. தங்கை மற்­ற­வர்கள் போல் ஏன் தனக்கு கை, கால்கள் இல்லை என்ற கேள்வி அவர் மனதில் எழுந்­தது. பெற்­றோ­ரிடம் இது குறித்து கேட்­ட­போது அவர் கள், ‘கட­வு­ளிடம் கேள்’ என்றனர்.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் அக்­கா­லத்தில் உடல், மன­நலக் குறை­பாடு உள்ள குழந்­தைகள், இயல்­பான குழந்­தைகள் படிக்கும் பாட­சா­லையில் படிக்க, சட்ட அனு­ம­தி­ இ­ருக்­க­வில்லை. ஆகவே, நிக்­குக்கும் ‘சிறப்புப் பள்­ளி’­யில்தான் இடம் கிடைத்­தது. துஸி­கா­வுக்கு மனம் உறுத்­தி­யது. உட லில் சில பாகங்கள் குறை­வாக இருக்­கி­றதே தவிர, நிக் மற்ற குழந்­தை­க­ளைப்­போல இயல்­பா­ன­வனே. அவன் ஏன் இங்கே படிக்க வேண்டும்? போராடிப் பார்த்தார். சட் டம் இடம் கொடுக்­க­வில்லை. எனவே நிக் குடும்­பத்­தினர், அமெ­ரிக்­காவின் கலிஃ­போர்­னி­யா­வுக்கு இடம்­பெ­யர்ந்­தனர்.
அங்கே நிக் இயல்­பான பாட ­சா­லையில் படிக்­க லாம், மருத்­துவ வச­திகள் அதிகம், நெருங்­கிய உற­வி­னர்­களும் இருக்­கி­றார்கள் என பல கார­ணங்கள். ஆனால், அமெ­ரிக்கப் பாட­சாலை சூழலில் நிக்கினால் ஐக்கியமாக முடி­ய­வில்லை. ஒவ்­வொரு பாடத்­துக்கும் வேறு வேறு அறை­க­ளுக்குச் செல்­ல­வேண்­டிய கட்­டாயம். இன்னும் பல பிரச்­னைகள். இதனால் பெற்றோர் மீண்டும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கே திரும்பிச் சென்று பிரிஸ்பேன் நகரில் வசிக்க ஆரம்­பித்­தனர்.

1989- ஆம் ஆண்டு உடல் குறை­பாடு உள்­ள­வர்­களும், இயல்­பான குழந்­தை­க­ளுக்­கான பாட­சா­லையில் படிக்­க லாம் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் சட்டத் திருத்தம் நிறை­வேற, அதன்­படி அனை­வ­ருக்­கு­மான பள்­ளியில் நிக் முதல் மாண­வ­னாக அனு­மதி பெற்றார். சக்­க­ர­நாற்­கா­லியில் நிக் பள்­ளிக்குச் செல்லும் புகைப்­படம் பத்­தி­ரி­கைகளில் வெளி­வர, நிக் பிர­ப­ல­மானார்.

1990 ஆம் ஆண்டில் அவுஸ்தி­ ரே­லி­யாவின் இளம் பிர­ஜைக்­கான விருதை அவர் வென் றார். அப்­போது நன்­கொ­டைகள் குவிய, அவை நிக்கின் மருத்­துவச் செல­வு­க­ளுக்கு உத­வின. செயற்கைக் கைகள் பொருத்திப் பார்த்­தார்கள். ஆனால், அவர் அதை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ‘நான், நானா­கவே இருந்­து­கொள்­கிறேன்’ என்றார் நிக்.

சமூகம் வித்­தி­யா­ச­மாக பார்த்­த­போ­திலும், தற்­கொலை எண்­ணங்­களை எல்லாம் உத­றித்­தள்­ளி­விட்டு உற்­சாக வாழ ஆரம்­பித்தார் நிக். குடும்­பத்­தினர் அவரை இயல்­பான ஒரு­வ­ராக நடத்த ஆரம்­பித்­தனர்.

பாட­சா­லையில் தன்­னுடன் வம்­பி­ழுத்த ஒரு மாணவன் மீது அதி­வே­க­மாக பாய்ந்து தலையால் மோதி தான் யாருக் கும் சளைத்­தவன் அல்ல என்­பதை நிக் வெளிப்­ப­டுத்­தினார்.

‘தான் சுதந்­தி­ர­மாக இயங்க வேண்டும் என விரும்­பிய நிக்., பல் துலக்­கு­வது, குளிப்­பது, கழி­வ­றையை உப­யோ­கிப்­பது, உடை அணி­வது, முட்­டையை உடைத்து ஆம்லெட் போடு­வது, இரண்டு விரல்­களால் ரிமோட்டை இயக்­கு­வது, கீபோர்டில் டைப் அடிப்­பது, குட்டிக் காலை துடுப்­பெனச் சுழற்றி நீச்­ச­ல­டிப்­பது என, தினம் தினம் புதிய விஷ­யங்­களை கற்க ஆரம்­பித்தார்.

படப்­பி­டிப்பிலும் அவர் படு கெட்டி. அவுஸ்­தி­ரே­லி­யா வின் கிரிபித் பல்­க­லைக்­க­ழகத்தில் வணி­கத்­து­றையில் இள­மாணி பட்டம் பெற்ற நிக் வுய்சிக், கணக்­கியல் மற்றும் நிதி திட்­ட­மிடல் துறையில் இரு முது­மாணிப் பட்­டங்­களைப் பெற்றார். அதே­வேளை தனது 17 வயது முதல் மற்­ற­வர்­க­ளுக்கு உந்­துதல் அளிக்கும் உரை­களை நிகழ்த்த ஆரம்­பித்­தி­ருந்தார் நிக். மேசை மேல் இருந்­த­வாறு உரை நிகழ்த்­தினார் அவர்.

அதிக மத ஈடு­பாடு கொண்ட நிக் வுய்­சிக்கை கிறிஸ்­தவ மத பிர­சா­ரங்­களை நிகழ்த்த அழைக்­கப்­பட்டார்.

லைவ் வித்­தவுட் லிம்ப், லவ் வித்­தவுட் லிமிட்ஸ் என பல நூல்­களை அவர் எழு­தினார். லைவ் வித்­தவுட் லிம்ப் எனும் பெயரில் தொண்டர் நிறு­வ­ன­மொன்­றையும் அவர் ஸ்தாபித்தார். தன்­னம்­பிக்கை நிறைந்த அவரின் உரை­களை கேட்­ப­தற்கு ஏரா­ள­மானோர் ஆர்வம் காட்­டினர். தனது கஷ்­டங்­க­ளி­லி­ருந்து மீண்ட கதையை நகைச்­சுவை கலந்து அவர் விப­ரித்தார். தற்­போது 5 கண்­டங்­களில் சுமார் 57 நாடு­களில் அவர் உரை­நி­கழ்த்­தி­யுள்ளார்.

கை, கால்கள் இல்­லா­விட்­டாலும் சேர்ஃபிங், கால்­பந்­தாட்டம், ஹொக்கி, நீச்சல், சுழி­யோட்டம் என பல்­வேறு விளை­யாட்­டு­களில் நிக் வுய்சிக் ஈடு­ப­டு­கிறார். சுறா தாக்­கு­த­லினால் கைகளை இழந்த அமெ­ரிக்க கடல்­ச­றுக்கல் வீராங்­கனை ஹமில்­டனும் நிக்­கிற்கு கடல் அலை­களின் மீது நீர்ச்­ச­றுக்­கலில் ஈடு­ப­டு­வ­தற்கு கற்­றுக்­கொ­டுத்தார். தரை­யிலும், கட­லிலும் மட்­டு­மல்ல, வானிலும் சாக­சங்­களில் ஈடு­பட துணிந்­தவர் நிக். வானி­லி­ருந்து குதிக்கும் ஸ்கை டைவிங்­கிலும் அவர் ஈடு­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

எல்லா இலட்­சி­யங்­க­ளையும் நிறை­வேற்ற முடிந்­தாலும் தனக்கு ஒரு­போதும் திரு­மணம் நடக்­காது என நிக் வுய்சிக் எண்­ணி­யி­ருந்தார். தன்னை காத­லிக்­கவோ திரு­மணம் செய்­யவோ ஒரு பெண்ணும் முன்­வர மாட்டாள் என அவர் கரு­தினார்.

ஆனால், அவ­ருக்கு அழ­கான அன்­பான மனை­வி­யுடன் ஆரோக்­கி­ய­மான இரு குழந்­தை­களும் உள்­ளனர். அவரின் மகன் கியோஸி ஜேம்ஸ் 2013 இல் பிறந்தான். இவ்­வ­ருடம் ஓகஸ்ட் மாதம் டேஜான் லெவி எனும் மகளும் பிறந்தாள்.

தனது மனைவி, குழந்­தை­யுடன் கடற்­க­ரை­க­ளுக்குச் செல்­வது, நீந்­து­வது, தனது மனை­வியை புகைப்­படம் பிடிப்­பது என இயல்­பான மனி­தர்­களைப் போலவே அவர் சகல நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­டு­கிறார்.

நிக் வுய்­சிக்கின் மனை­வியின் பெயர் கெனே மியா­ஹரா. ஜப்­பா­னிய தாய்க்கும் மெக்­ஸிகோ தந்­தைக்கும் மக­ளாக பிறந்­தவர் கெனே மியா­ஹரா.

2010 ஆம ஆண்டு அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத் தில் கெனே மியா­ஹ­ராவும் நிக் வுய்­சிக்கும் முதன்­மு­தலில் சந்­தித்­தனர். 2012 ஆம் ஆண்டு இவர்­களின் திரு­மணம் நடை­பெற்­றது.

திரு­மணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து, தனது காதலிக்கு எப்படி நிச்சயதார்த்த மோதிரத்தை அணி விப்பதில் நிக்கிற்கு சிரமம் இருக்கவில்லை. தனக்கே உரிய பாணியில் அதற்கும் வித்தியாசமான வழிதேடி கொண்டார் நிக்.

“பேபி, நான் உன்னை காதலிக்கிறேன். உனது கைகளை முத்தமிட விரும்புகிறேன். எனக் கூறி முத்தமிடும்போது, எனது வாயில் வைத்திருந்த மோதிரத்தை அவருக்கு அணிவித்தேன். கெனே முதலில் நான் அவரின் விரலை கடிப்பதாகவே எண்ணினார். பின்னர்தான் அவருக்கு அது மோதிரம் என் பது புரிந்தது. நான் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தபோது கெனே மியாஹரா ஆனந்த கண்ணீர் வடித்தார்” என்கிறார் நிக் வுய்சிக்.

தன்னம்பிக்கையின் உச்சமாக திக ழும் நிக் வுய்சிக் கிற்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக் கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை சுட்டுக்கொன்றமை தொடர்பில் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் கொலைக் குற்றவாளி! தென் ஆபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு…!!
Next post ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி போர் விமானம் குண்டு வீச்சு…!!