வடகொரியாவில் வெள்ளத்துக்கு 100 பேர் பலி
வடகொரியாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை காரணமாக 100 பேர் பலியானார்கள். தென்கொரியாவிலும் பலத்த மழை பெய்தது. அங்கு 29 பேர் பலியானார்கள். 32 பேரை காணவில்லை. தென்கொரியாவின் கிழக்குமாநிலங்களில் கடந்த 4 நாட்களில் 50 செமீ மழை பெய்தது. லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரசப்ளை இல்லை.
இந்த மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதம் பல கோடி ரூபாய் ஆகும். வடகொரியாவில் வெள்ளத்தில் பல கிராமங்கள் அடித்துச்செல்லப்பட்டன. பாலங்கள், ரோடுகள் சேதம் அடைந்தன.