ஆயுதங்கள் தளவாடங்களை கடத்த கேரள கடற்கரையை பயன்படுத்தும் விடுதலைப்புலிகள்

Read Time:3 Minute, 32 Second

l-t-t-e.gifஆயுதங்கள் தளவாடங்கள் மற்றும் மருந்து பொருட்களை கடத்துவதற்காக கேரள கடற்கரை பகுதியை மெல்ல மெல்ல விடுதலைப்புலிகள் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். ஆர்.டி.எக்ஸ் போன்ற வெடிமருந்துகளை மலபார் பகுதியிலிருந்து புலிகள் கடத்துவதாக தெரிகிறது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள படைக்குமிடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. புலிகளின் முகாம்கள் சிங்கள படை தாக்கி அழித்து வருகிறது. அதே போல இலங்கை விமான தளங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மீது விடுதலைப்புலிகளும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் . இப்படி தாக்குதல் தொடர்ந்து நடப்பதால் இனி அமைதி பேச்சுக்கு வழியே இல்லை என்பது புலனாகிவிட்டது. இலங்கையில் சண்டை நடப்பதால் அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இதை தடுப்பதற்காக இந்திய கடற்படையும், கடலோரகாவல் படையும் தொடர்ந்து விழிப்புணர்வோடு இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டதால் புலிகளின் நடமாட்டம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை பகுதி வழியாக இனி விடுதலைப்புலிகள் இனி ஊடுருவல் செய்ய முடியாது. இதையடுத்து விடுதலைப்புலிகள் தங்கள் நடவடிக்கைளை கேரள கடற்கரைக்கு மாற்றி விட்டதாக கடற்கரை உயர் அதிகாரி ஓருவர் தெரிவித்தார். தமிழ்நாடு கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே புலிகள் ஊடுருவல் செய்வது சாத்தியமில்லை.

எனவே தான் ஆயுதங்களையும், தளவாடங்களையும், மருந்துகளையும் கடத்துவதற்காக விடுதலைப்புலிகள் மெல்ல மெல்ல கேரள் க டற்கரையை பயன்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதர தீவிரவாத அமைப்புகல் மலபார் பகுதியை பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்றும் அந்த அதிகாரி நிருபர்களிடம் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைளை சமீப காலமாக கேரள கடற்பகுதியில் செய்வதையும் அவர் சுட்டிக்காட்டினார். கொச்சி திருவனந்தபுரம் இடையே ஓரு மீன்பிடி படகை அவர்கள் பறிமுதல் செய்ததை அதிகாரி சுட்டிக்காட்டினார்.

புலிகளின் ஊடுருவலுக்கு இது ஆரம்பம் என்றும் கூறினார். மற்றொரு அமைப்பு கொங்கன் கடற்கரை வழியாக ஆர்.டி.எக்ஸ். மருந்து கடத்தியதாகவும் அவர் கூறினார். இப்போது இந்த அமைப்பு மலபார் பகுதியை பயன்படுத்துவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு குறித்து தொழில் தருநர்களுடன் அரசு பேச்சுவார்த்தை
Next post நீர்கொழும்பு வைத்தியசாலை படுகொலை வைத்தியர் அடையாளம் காணப்பட்டார்