துருக்கியில் விமானம் விழுந்து 56 பேர் பலி

Read Time:53 Second

துருக்கியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 பேர் பலியாகிவிட்டனர். அட்லஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த எம்.டி-83 ரக விமானம் இன்று காலை இஸ்தான்புல் நகரில் இருந்து இஸ்பார்டா என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகளும், 2 விமானிகளும், 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர். மத்திய துருக்கியில் உள் இஸ்பார்டா நகருக்கு 12 கி.மீ. தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மலைப் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொழும்பில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருபது பேர் பலி..!
Next post மலேசியா: இந்திய தலைவர் கைது