ஸ்காட்லாந்தில் பறந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்து 270 பேர் பலியான நாள்..!! (21-12-1988)

Read Time:2 Minute, 9 Second

timthumb (6)அமெரிக்காவின் பான் ஆம்-103 என்ற விமானம் கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து நியூயார்க்கின் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. 243 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் ஸ்காட்லாந்தின் லாக்கர்பி என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 259 பேரும் இறந்தனர். விமானம் தரையில் விழுந்ததால், தரையில் இருந்த 11 பேரும் பலியாகினர். விசாரணையில் அந்த விமானம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது.

இரண்டு ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு 1991ம் ஆண்டு நவம்பர் மாதம் லிபியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கொலை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது. நீண்டகால பேச்சுவார்த்தை மற்றும் ஐ.நா. பொருளாதார தடை ஆகியவற்றுக்குப் பிறகு 1999ம் ஆண்டு அவர்கள் இரண்டு பேரையும் லிபிய தலைவர் முவம்மர் கடாபி விசாரணைக்காக ஒப்படைத்தார்.

அவர்களில் லிபிய புலனாய்வு அதிகாரி ஒருவர் 2001ல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் புற்றுநோய் தாக்கியதால் 2009ல் ஸ்காட்லாந்து அரசால் அவர் விடுவிக்கப்பட்டு, 2012ல் இறந்தார். மற்றொரு குற்றவாளிக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்க விமான போக்குவரத்து வரலாற்றில் இது மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்திய சம்பவமாக கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூத்துக்குடியில் 300 கிலோ எடை கொண்ட பெண் சாவு..!!
Next post அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்..!!