விமானத்தின் கூரை மீதும் இனி பயணிக்கலாம் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது…!!

Read Time:3 Minute, 9 Second

13873_35தொழில்­நுட்ப வர­லாற்றில் ஒரு மைல் கல்­லாக, பறந்துகொண்டு இருக்கும் விமா­னத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்­நுட்பம் ஒன்று அறி­மு­க­மாக உள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

பஸ் மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்­போது விமா­னத்தின் மீதும் அமர்ந்து சொகு­சாக இயற்கை காட்­சி­களை அனு­ப­வித்­த­வாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்­நுட்­பத்தை வின்ட்ஸ்பீட் டென்­னோ­லொஜிஸ் எனும் நிறு­வனம் அறி­முகம் செய்­துள்­ளது.

ஸ்கைடெக் (SkyDeck) என்ற அழைக்­கப்­படும் இத்­தொ­ழில்­நுட்­பத்­தின்­படி, விமா­னத்தின் கூரை மீது கூண்­டொன்று அமைக்­கப்டும். இந்த கூண்டை சுற்றி பாது­காப்­பான மற்றும் உறு­தி­யான கண்­ணாடி சுவர்கள் எழுப்­பப்­படும்.

இந்த கூண்­டிற்கு செல்­வ­தற்கு விமா­னத்­திற்­குள்ளே இருந்து தானி­யங்கி படிக்­கட்­டுகள் மற்றும் லிப்ட் வச­தியும் உள்­ளன.

விமா­னத்­திற்குள் உள்ள ஒரு சிறப்பு பகு­தியில் பொருத்­தப்­பட்­டுள்ள இரண்டு இருக்­கை­களில் அமர்ந்­து­கொண்டால், அந்த இருக்­கைகள் மேலே தூக்கி செல்­லப்­பட்டு கூரை மீதுள்ள கண்­ணாடி கூண்­டிற்குள் நிலை நிறுத்­தப்­படும்.

பின்னர், எவ்­வ­ளவு தூரம் பயணம் செய்­தாலும், சோர்வு ஏற்­ப­டாமல் சுமார் 360 பாகை சுற்­ற­ளவு வரை சுற்றி பார்த்­துக்­கொண்டு பயணம் செய்­யலாம்.

இது­போன்ற வச­தி­யினை எந்­த­வி­த­மான நவீன விமா­னத்­திலும் பொருத்­த லாம் என வின்ட்ஸ்பீட் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
இந்த வச­தி­யினை விமா­னத்தில் பொருத்­து­வ­தற்கு 8 முதல் 25 மில்­லியன் டொலர் (சுமார் 112 கோடி முதல் 350 கோடி ரூபா) வரை செல­வாகும்.

“தொலை தூர விமா­னப்­ப­யணம் மேற்­கொள்ளும் பய­ணி­க­ளுக்கு சோர்வு ஏற்­ப­டாமல் இருக்­கவே இந்த வச­தியை அறி­மு­கப்­ப­டுத்த உள்ளோம்.

இந்த நவீன வச­தியை தற்­போது காப்­பு­ரிமை மட்­டுமே செய்து நிலையில், இது விரைவில் நவீன விமானங்களில் பொருத்தப்பட உள்ளது’ என இது குறித்து வின்ட்ஸ்பீட் டெக்னோலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடை திறப்புவிழாவில் ஹன்சிகவிடம் சிலுமிசம் செய்த கிழவன்…!!
Next post ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த வேர்க்கடலை வெண்ணெய்! சாப்பிட்டு பாருங்கள்…!!