வாஷிங்டனில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்

Read Time:2 Minute, 8 Second

அமெரிக்காவில் மற்ற நகரங்களை விட தலைநகர் வாஷிங்டனில் தான் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வாஷிங்டனில் ஆறு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு 128 பேர் என்ற அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். தேசிய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 14 பேர் என்ற அளவில் தான் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். 2005ம் ஆண்டு அமெரிக்காவில் மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 9 சதவீதம் பேர் வாஷிங்டனை சேர்ந்தவர்கள் என்ற நிலை காணப்பட்டது. பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க், டெட்ராய்ட், சிகாகோ ஆகிய நகரங்களை விட வாஷிங்டனில் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். இந்த நகரில் தற்போது 12,428 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேர் கறுப்பர்கள். 2006ம் ஆண்டில் எச்.ஐ.வி., நோய் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டவர் களில் 8,300 பேர், எய்ட்ஸ் நோயாளிகளாக உருவெடுத்து விட்டனர். 224 பேர் இறந்து விட்டனர். வாஷிங்டனில் இந்த அளவுக்கு எய்ட்ஸ் நோய் அதிகரிக்க காரணம், ஓரினச் சேர்க்கை பழக்கம் தான். எச்.ஐ.வி.,யால் பாதிக் கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் ஒரே ஆண்டில் முழு அளவு எய்ட்ஸ் நோயாளிகளாக உருவெடுத்து விட்டனர். அவர்கள் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் என பல ஆண்டுகளுக்கு பிறகு தான் அடையாளம் காணப் பட்டுள்ளனர் என்பதே இதற்கு காரணம் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சர்ச்சையில் சிக்கி உள்ள `இந்தி நடிகை மாதுரி தீட்சித் படத்துக்கு தடை விதிக்க முடியாது’ மத்திய அரசு அறிவிப்பு
Next post தமிழகத்தில் உள்ள குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி : ரூ.10 ஆயிரம் கோடிக்கு சரக்கு விற்க இலக்கு!!