ஒரு கிளாஸ் குடி தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள்…!!

Read Time:1 Minute, 45 Second

dd963012-350c-400a-9690-c58340aeacb4_S_secvpfநாம் குடிக்கும் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பாக்டீரியா என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட தெற்கு சுவிடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு முடிவு பற்றி கூறும்போது, “புது தொழில்நுட்பங்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். அவைதான் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிய உதவியுள்ளன.

நம் உடலில் உள்ளது போல் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் அந்த நீரை சுத்தம் செய்து குடிக்க ஏதுவாக மாற்றுகின்றன. இயந்திரங்கள் மட்டும் குடிநீரை சுத்திகரிக்கவில்லை. அதிகளவில் குடிநீர் குழாய்களில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் குடிநீரை தூய்மைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் வளர்ப்பதன் மூலம் குடிநீரை தூய்மையாக்க முடியுமா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்டையார்பேட்டையில் சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது…!!
Next post மியான்மரில் ராணுவ சீருடையை நையாண்டி செய்து பேஸ்புக்கில் விமர்சித்த இளம்பெண்ணுக்கு ஆறுமாதம் சிறை…!!