பிரிட்டன் சுற்றுலா தலங்களில் இந்துக்கோவில் முதலிடத்தில்
Read Time:1 Minute, 10 Second
பிரிட்டனின் பெருமைக்குரிய இடங்களில் முதலாவதாக லண்டனிலுள்ள சாமி நாராயணன் கோவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரிட்டன் அரசு பிரிட்டனிலுள்ள சுற்றுலாத் தலங்களை தேர்வு செய்வதற்கு இணையத்தளம் மூலமான வாக்கெடுப்பினை நடத்தியது. அந்த வாக்கெடுப்பிலேயே 2344 வாக்குகளைப் பெற்று இக்கோவில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இவ்வாக்கெடுப்பில் மொத்தம் 36,800 பேர் இணையத்தள மூலமான வாக்குகளை அளித்து சுற்றுலாத் தலங்களை தேர்ந்தெடுத்தனர். இதில் இவ் இந்துக் கோவில் முதலாமிடத்திலும் கிரின்விச்சிலுள்ள மியூசியம் இரண்டாம் இடத்தையும் பொரெஸ்ட் ஹில் என்ற இடத்திலுள்ள மியூசியம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.