யுகோஸ்லாவியா ஒட்டலில் பின்லேடன் பெயர் நீக்கம்
யுகோஸ்லாவியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடில் அமெரிக்க தூதரகத்தின் எதிரில் மிலோமிர் என்பவர் ஓட்டல் நடத்தி வந்தார். இவர் தனது ஓட்டலுக்கு ஒசாமா என்று பெயர் சூட்டி இருந்தார். இதற்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மிலோமிர் ஓட்டலின் பெயரை மாற்றி விட்டார்.
ஒசாமா என்றால் செர்பிய மொழியில் தனித்து இரு என்று அர்த்தம். இதை கருத்தில் கொண்டு ஓட்டலுக்கு பெயர் வைத்தேன். மற்றபடி அமெரிக்கர்களை எதிர்ப்பதற்காக இல்லை என்றும் மிலோமிர் கூறி உள்ளார்.