உலகின் மிக அதிக வயதான ஜப்பான் தாத்தா மரணம்…!!

Read Time:1 Minute, 21 Second

464ca0c1-d9b5-480a-bc0a-e7f2a20dc716_S_secvpfஉலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற யசுடரோ கோய்டி, மாரடைப்பு காரணமாக நகோயா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 112.

1903-ம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார்.

ஒரு தையல்காரராக தன் வாழ்க்கையை தொடங்கிய அவர், உலகிலேயே அதிகம் வயதானவராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த போது உலக மக்களால் அறியப்பட்டார்.

கின்னஸ் சாதனையின் போது, மகிழ்ச்சியாக வாழ்வதே தனது நீண்ட நாள் ஆயுளுக்கு காரணம் என்று சொன்ன கோய்டி, இன்று மரணமடைந்தார்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நூறு வயதை கடந்த சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துபாயில் காணாமல்போன இந்திய தொழிலதிபரின் பிணம் கடலில் கரை ஒதுங்கியது…!!
Next post எரிபொருள் விலை சூத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு…!!