இரு நாட்களுக்கு விஷேட போக்குவரத்து நடவடிக்கை…!!

Read Time:2 Minute, 19 Second

676இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் (3ம், 4ம் திகதிகளில்) கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாளை மற்றும் நாளை மறுதினம் காலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை காலிமுகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரை, சைத்திய வீதி ஆகியவற்றில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 07.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்று வட்டம் வரை, கொள்ளுப்பிட்டி புனித மைக்கல் சுற்றுவட்டம் முதல் காலி வீதி வரை, ரோடுன்டா சுற்று வட்டத்திலிருந்து காலி வீதி வரை, ஷெரமிக் சந்தியிலிருந்து பழைய பாராளுமன்றம் வரையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை யோர்க் வீதியிலிருந்து வங்கி மாவத்தை வரை, காமினி சுற்று வட்டத்தின் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை வரையும் வாகனப் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி வீதியூடாக கொழும்புக்குள் நுழையும் மற்றும் வௌியேறும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி காலை 09.00 மணி முதல் சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடையும் வரை, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுக்கும் யோஷித…!!
Next post திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி நகை பறித்தவர் கைது…!!