வான் தாக்குதல்களால் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம்…!!

Read Time:2 Minute, 8 Second

sfdfdfdfdசிரியாவில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் காரணமாக சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக நேற்றோ தெரிவித்துள்ளது

ரஷ்ய வான் தாக்குதல்கள் பெரும்பாலும், எதிர்தரப்பு குழுக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என நேற்றோவின் தலைவர் ஜீன்ஸ் ஸ்ரோல்டன்ட்பேக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் சிரியா தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்த வாரத்தில் ஆரம்பமான நிலையில், ரஷ்யாவின் பாரிய பின்னணியுடன் ஜனாதிபதி பஷார் அல் அசாட் புதிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை இன்று சந்தித்து தற்போதைய சிரிய நிலைமை தொடர்பாக ஆராயவுள்ளது.

பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

அதேவேளை, அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தொலைபேசி ஊடாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கி லவ்ரோவ்வுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதன்போது, சிரிய எதிர்தரப்பினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி எச்சரித்திருந்தார்

சிரிய யுத்தம் ஆரம்பமானது முதல் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது போதையில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த 11-ம் வகுப்பு மாணவர்கள்…!!
Next post எச்சில் மூலம் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம்..!!