செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட நாசா நடவடிக்கை…!!

Read Time:1 Minute, 32 Second

ewrereஅமெரிக்காவின் நாசா விண்வெளிமையம் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே 2030 ஆம் ஆண்டில் அங்கு பொதுமக்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட ‘நாசா’ முடிவு செய்துள்ளது. அதற்கான ஆய்வு பெருநாட்டின் தலைநகரமான லிமாவில் நடைபெறுகிறது.

லிமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் உதவியுடன் அடுத்த மாதம் (மார்ச்) இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப நிலை மற்றும் சுற்றுச் சூழல் அமையும் விதத்தில் மிகப்பெரிய கூண்டு அமைத்து அதில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது 4500 ரகங்களில் செவ்வாய் கிரகத்தில் பயிரிடுவதற்காக 100 விதமான உருளைக் கிழங்கு வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை பயிரிடுவதற்காக லிமாவில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் அன்டெஸ் மலைப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை தொட்டால் ஷாக் அடிக்கும் : சில்மிஷ ஆண்களுக்கு ஆப்பு…!!
Next post ஸிகா வைரஸ் தொற்று அபா­யத்­தி­லுள்ள பெண்கள் கருத்­தடை செய்து கொள்­வ­தற்கு ஆத­ர­வாக கருத்து…!!