பாகிஸ்தானில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின..!!

Read Time:1 Minute, 6 Second

bb6b34ce-a74c-421b-b547-7bab032cb238_S_secvpfபாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.

அங்கு 5.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலை பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் அப்பர் டிர், லோயர் டிர், சுவாத் மற்றும் பஜாயுர் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்டையார்பேட்டையில் 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்…!!
Next post பிஜி தீவை சூறையாடிய வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு…!!