காதலியை கண்டுபிடிப்பதில் அபாரம் * ஆப்ரிக்க யானைகளின் அறிவு திறன்

Read Time:1 Minute, 22 Second

காதல் பெண் யானையைக் கண்டுபிடிப்பதில் ஆப்ரிக்க ஆண்யானைகள், அபாரமாக நினைவுத்திறனை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கென்யா நாட்டில் உள்ள எம்போசேலி தேசிய பூங்காவில், ஆப்ரிக்க யானைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு விவரங்கள் வெளியானது. யானைகள் உறவுகளைத் தேடும் போது நினைவுத் திறனை அதிகம் பயன்படுத்துகின்றன. உறவுகளின் சிறுநீர் வாசனையை வைத்தே உறவுக்கார யானைகளை அடையாளம் காண்கிறது. ஒரே நேரத்தில் 17 யானைகளை அடையாளம் காணும் நினைவுத்திறன் யானைக்கு உண்டு. ஆப்ரிக்க யானைகள் நீண்ட பயணம் செய்யும் வழக்கம் கொண்டவை. வழி தவறி நீண்ட துõரம் சென்று விட்டால், நினைவுத் திறனை பயன்படுத்தி, நெருங்கிய உறவுள்ள பெண் யானைகளை அடையாளம் கண்டு காதல் வயப்படுகின்றன. யானைகள் குடும்ப அமைப்பை ஏற்படுத்தி வாழ்கின்றன. இதில் அக்கம் பக்கத்தில் <உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த யானைகளும் உள்ளன. பெண் யானைகளின் சிறுநீரை வாசனையை வைத்தே அவை தான் விரும்பும் யானையா என்று அடையாளம் கண்டுபிடித்து விடுகின்றன ஆப்ரிக்க யானைகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரபாவுக்கு மட்டும்தான் காதல் வருமா?, சீமானிடம் ஒரு கேள்வி!! – வித்தி
Next post வெளிநாட்டு சிறைகளில் 5,197 இந்தியர்கள்!!