அண்டார்டிகாவில் மிகப்பெரிய டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு

Read Time:1 Minute, 38 Second

அண்டார்டிகா பனி பிரதேசத்தில், பெர்ட்மோர் கிளேசியர் பகுதியில், கிர்க் பேட்ரிக் என்ற பனி மலை இருக்கிறது. இதில், 19 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் மிகப்பெரிய டைனோசர் மிருகத்தின் படிவம் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் கால்கள், பாதம், மூட்டு போன்றவை இறுகி சிதைவாக இருக்கிறது. இந்த படிவத்தை, பனி மலையின் உள்பகுதியில் இருந்து, ஆஸ்திரேலிய ஆய்வாளர் வில்லியம் ஹேமர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் வெளியே எடுத்து இருக்கிறார்கள். இது பழங்கால ஜ×ராசிக் காலத்தில் வாழ்ந்து இருக்க வேண்டும் என்றும், 21 அடி நீளத்திலும், 5 டன் எடையிலும் இருந்து இருக்க வேண்டும் என்றும், நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த மிருகத்தின் கழுத்து மற்றும் வால் பகுதி மிகவும் நீண்டு இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி குழுவை சேர்ந்த சுமித் கூறினார். அவர் மேலும் கூறுகையில், `அண்டார்டிகாவில், மேலும் ஒரு டைனோசரின் படிவத்தை மீட்டு கொண்டு வரும் பணி நடக்கிறது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சவுதி மன்னர் அப்துல்லா மன்னிப்பு!!
Next post நடிகை சரிதா விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தையில் இழுபறி பிப்ரவரி 18-ந்தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு