கிளிநொச்சியில் உலக சிறுநீரக தினம்..!!

Read Time:1 Minute, 41 Second

hyponatremia-kindney-diseaseஆண்டு தோறும் மார்ச் மாதம் 2ஆவது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம், இன்று வியாழக்கிழமை (10) கடைப்பிடிக்கப்படுகின்றது.
சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகின்றது.

அவ்வகையில் இவ்வாண்டுக்கான சிறுநீரக தினம் ‘ஆரம்பத்திலேயே கவனமாக செயற்படுவதன் மூலம் அனைவரையும் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாப்போம்’ (Act Early to Prevent It) எனும் தொனிப்பொருளில் உலகளவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

2006ஆம் ஆண்டில் முதன் முதலாக 66 நாடுகளின் ஒத்துழைப்புடன் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இவ் நாடுகளின் எண்ணிக்கை 88ஆக அதிகரித்திருந்தது.

இதேவேளை, உலக சிறுநீரத தினத்தையொட்டி, கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நிகழ்வொன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீதியில் நிர்வாணமாக திரிந்த நபர்..!!
Next post தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞனின் கை துண்டிப்பு..!!