ஒரு மனிதன் எப்போது முழுவளர்ச்சியடைகிறான்?.. இதோ உடலின் அதிசயங்கள் உங்களுக்காக…!!

Read Time:2 Minute, 10 Second

body_human_001.w245மனிதனின் உடல் அதிசயங்கள் நிறைந்தது. ஒரு வருடத்தில் நமது கல்லீரல் 23 பால் லாரிகளில் நிரப்பக்கூடிய அளவுக்கு இரத்தத்தை வடிகட்டுகிறது. உடலில் கனமான உறுப்பு மூளைதான். இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ. மனித உடலில் 60சதவீதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும்.

இதயம் 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் இரத்தத்தை 1.68 கோடிமைல் நீள இரத்தக் குழாய்களின் வழியேபரவச் செய்கிறது.இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடையுள்ளபொருளை பூமியில் இருந்து 1 அடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.

மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் வளர்ச்சியையும் பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.

ஒரு மனிதன் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்று விடுகிறான். 40 வயதிற்கு மேல் வளர்ச்சி நின்று விடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். இதுகுறுத் தெலும்புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது.

குழந்தை பிறக்கும் போது 300 எலும்புகள் இருக்கும். இவற்றுள் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லைவிட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவுள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும். அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்குப்போட்டு தற்கொலை: 5 நாட்களாக பிணமாக கிடந்த டிரைவர்…!!
Next post இது என்ன பல்லா இல்ல பாராங்கல்லா?? என கேட்க தூண்டும் காணொளி…!!