பெர்லின் நகரில் குண்டுவெடிப்பு: கார் டிரைவர் பலி…!!

Read Time:1 Minute, 49 Second

f632ac51-595c-42c2-8400-90f6f0c9021f_S_secvpfஜெர்மனி தலைநகர் பெர்லினில் இன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் கார் டிரைவர் பலியானார்.

வெற்றி நினைவுச்சின்னத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. காரின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்திருந்தது. காருக்குள் இருந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினார். அந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் இருந்தபோதிலும் வேறு ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.

வெடிகுண்டு காருக்கு வெளியே வெடித்ததா அல்லது காருக்குள் வெடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குண்டுவெடிப்பில் பலியான நபர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால், விசாரணை நடைபெற்று வருவதால் அவரது பெயரை வெளியிடவில்லை.

பெர்லின் நகரில் போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபடும் பைக் கும்பல்களுக்கிடையே ஏற்படும் மோதல் மற்றும் வன்முறை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் படுகொலை: வீடுபுகுந்து வெட்டிச்சாய்த்த கும்பல்…!!
Next post பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!