அனிமேசனில் அனில் அம்பானி ரஜினி மகள் நிறுவனத்தில் பங்குதாரராக திட்டம்

Read Time:2 Minute, 20 Second

rajinikanth501.jpgரஜினி காந்த் மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸ் என்ற அனிமேசன் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அனில் அம்பானி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.500 கோடியில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு அனிமேசன் நிறுவனங்களை வாங்க திட்டமிட்டு உள்ளது. சில நிறுவனங்களில் குறைந்த அளவு பங்குகளை வாங்கிக் கொள்ளவும் விரும்புகிறது. அதில் சவுந்தர்யா ரஜினி காந்தின் ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஒன்று. சவுந்தர்யா இப்போது `சுல்தான் தி வாரியர்‘ என்ற அனிமேசன் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் அனில் அம்பானியின் ஆட்லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாராகி வருகிறது. இப்படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி என கூறப்படுகிறது. இந்தியாவில் தயாரான அனிமேசன் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இதுதான். இது 2008 டிசம்பரில் திரைக்கு வரவுள்ளது. ரஜினியை வைத்து தயாராவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்து கொள்ள பல நிறுவனங்கள் விரும்புகின்றன. ‘‘அனில் அம்பானி நிறுவனத்தை தவிர, வேறு இரண்டு நிறுவனங்களும் இதில் குறிப்பிட்ட அளவு பங¢குகளை வாங¢க ஆர்வத்துடன் உள்ளன. சுல்தான் படம் தயாரிப்பது பற்றி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த ஆர்வம் ஆரம்பித்துவிட்டது” என்கிறார் விஷயமறிந்த ஒருவர். ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம், புனேவை சேர்ந்த அனிரைட்ஸ் இன்போமீடியா என்ற அனிமேசன் நிறுவனத்தை ரூ.200 கோடிக்கு வாங்கி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈரானில் தீவிரவாத தலைவர்கள் 4பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது
Next post அமெரிக்காவில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் தீ விபத்து ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்