புனித வெள்ளியை முன்னிட்டு திறந்த வெளி சிலுவைப் பாதை…!!
இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் பெரிய வெள்ளி தினம் இன்று உலக கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், இத்தினைத்தையொட்டி கொழும்பு, புது செட்டித்தெரு புனித வியாகுல மாதா ஆலய முன்றலிலிருந்து திறந்த வெளி சிலுவைப் பாதை ஊர்வலம் காலை 6 மணிக்கு ஆரம்பமானது
சிலுவையில் அறையப்பட்ட இயேசு அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் மரணத்தையும் நினைவு கூறும் வகையில் மக்கள் ஊர்வலமாக சிலுவையினைச் சுமந்து சென்றதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
புனித வியாகுல மாதா ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த ஊர்வலம், ஜம்பட்டா வீதி, விவேகநந்தா வீதி வழியாக, மீண்டும் புது செட்டித்தெரு வீதியை வந்தடைந்து ஆலயத்தில் முடிவடைந்தது.