கருக்கலைப்பால் வருடாந்தம் 10 கர்ப்பணிகள் மரணம்…!!

Read Time:1 Minute, 34 Second

ld1587சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக வருடாந்தம் சுமார் 10 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணிக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பவதியாகின்றனர். இவர்களில் 15ஆயிரம் பேர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர். இவ்விதம் கருக்கலைப்பு செய்பவர்களிலேயே 10 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணிக்கின்றனர்.

அதிகமான தாய்மார் தற்கொலை செய்வதற்கும் ஆளாகின்றனர்.

கடந்த வருடத்தில் 50 கர்ப்பிணித் தாய்மார் இவ்விதம் தற்கொலை செய்துள்ளனர்.

நாட்டின் சனத்தொகையில் 27வீதமான பெண்கள் குழந்தையைப் பெறக்கூடிய வயதினராவார். வருடாந்தம் ஓர் இலட்சத்து 80 ஆயிரம் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. வருடாந்தம் 24 ஆயிரம் வயது குறைந்த கர்ப்பிணித் தாய்மார் காணப்படுகின்றனர். வறுமை, வீட்டு வன்முறை, அதிகமான சோர்வு, மந்த போசனை என்பன இவ்வாறான சுகாதாரக் கேடுகளுக்கு பிரதான காரணமாகும். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கத்தி குத்துக்கு இலக்கு…!!
Next post என்னம்மா பப்ளிக்கல இப்படி பண்றீங்களேம்மா…!!