பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்த்து பெண்ணின் வீட்டுக்கு விரைந்து சென்ற குண்டு செயலிழப்புப் பிரிவினர்..!!

Read Time:2 Minute, 36 Second

download (1)பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், பேஸ்­புக்கில் வெளி­யிட்ட புகைப்­ப­டத்தைப் பார்த்து அப்­பெண்ணின் வீட்­டுக்கு குண்டு செய­லி­ழப்புப் பிரி­வினர் விரைந்து சென்ற சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்றுள்­ளது.

தான் 4 வரு­டங்­க­ளாக வீட்டில் வைத்­தி­ருக்கும் குண்டு ஒன்றின் கவ­சத்தை இப்­பு­கைப்­ப­டத்தின் மூலம் மேற்­படி பெண் வெளி­யிட்­ட­மையே இதற்குக் காரணம்.

57 வய­தான ஜேன் மெப் எனும் இப்­பெண்ணும் அவரின் கணவர் அன்ட்ரூ மெப் மற்றும் இத்­தம்­ப­தியின் மக­னான கிறேக் ஆகியோர் தமது முந்­தைய வீட்டு வளா­கத்­தி­லி­ருந்து இந்த குண்டின் பகு­தியை கண்­டெ­டுத்­த­னராம்.

ஷ்ரோப்­ஷயர் பிராந்­தி­யத்தில் வசித்­த­வே­ளையில், வீட்டுத் தோட்ட நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­த­போது இது கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

பின்னர் அவர்கள் வடக்கு வேல்ஸ் பகு­திக்கு குடி­பெயர்ந்த போதிலும் அந்த குண்டின் கவ­சத்தை தம்­முடன் எடுத்துச் சென்று ஓர் அலங்­காரப் பொருள் போன்று வீட்டில் வைத்­தி­ருந்­தனர்.

இதன் புகைப்­ப­டத்தை ஜேன் மெப் கடந்த வாரம் சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்­டி­ருந்தார். இப்­பு­கைப்­படம் குறித்து பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­ட­போது குண்டு செய­லி­ழக்கும் பிரி­வினர் அப்­பெண்ணின் வீட்­டுக்கு அனுப்பப்­­பட்­டனர்.

அவ்­வீடு அமைந்­தி­ருந்த வீதியும் மூடப்­பட்­டது. மேற்­படி குண்டு முதலாம் உலக யுத்த காலத்­துக்­கு­ரி­யவை என அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­த­தாக ஜேன் மெப் கூறினார்.

எனினும், அந்த குண்டுக் கவ­ச­மா­னது ஆபத்­தற்ற பொருள் என பிரகடனப் படுத்தப்ப ட்டதையடுத்து, அதை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு இக்குடும்பத்தினருக்கு அனுமதி வழங் கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க வடகடலில் ரோந்தை தீவிரப்படுத்துங்கள்! கடற்படைக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு..!!
Next post மனைவியை அழைக்க கள்ளக்காதலன் வீட்டுக்குச் சென்ற கணவர் கொடூர கொலை..!!