வசமாக அகப்பட்ட சைக்கிள் திருடன்! மக்களால் நையப்புடைப்பு..!!
சைக்கிளை திருடும்போது வசமாக அகப்பட்ட திருடன் ஒருவன் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உரும்பிராய் சந்தியில் உள்ள பல்பொருள் களஞ்சியம் ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு சைக்கிளில் வந்த சிறுவனை தாக்கிவிட்டு அவனுடைய சைக்கிளை சந்தேகநபர் பறிக்க முயன்றுள்ளார்.
இதன்போது சிறுவன் கூக்குரலிட அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் திரண்டு திருடன் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளான்.
பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணை செய்ததுடன் திருடனை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.