’ஆட்டோகிராஃப்’ கேட்ட பெண்: பொது இடத்தில் அடிதடியில் ஈடுபட்ட பிரபல ஹொலிவுட் நடிகர்..!!

Read Time:2 Minute, 0 Second

குழந்தைகள் சண்டை தேவியர் இல்லம்அமெரிக்காவில் உள்ள வீகஸ் நகரில் நேற்று முன் தினம் ‘Face Off’ படம் மூலம் உலகப்புகழ் பெற்ற நிக்கோலஸ் கேஜ்(52) என்ற நடிகர் அங்குள்ள ஒரு கேளிக்கை அரங்கிற்கு சென்றுள்ளார்.

நிக்கோலஸ் கேஜ்ஜுடன் அவரது நண்பரும் பிரபல பாப் பாடகருமான வின்ஸ் நீய்ல்(55) என்பவரும் சென்றுள்ளார்.

இந்நிலையில், அரங்கத்திற்குள் நிக்கோலஸ் கேஜ் சென்றவுடன் அங்கிருந்த பெண் ஒருவர் ஓடி வந்து அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாடகரான வின்ஸ் நீய்ல் அந்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார்.

இதனை பார்த்த அங்கிருந்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை பார்த்து நிக்கோலஸ் கேஜ்ஜும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக தனது நண்பரை அடித்து கட்டுப்படுத்துவது போல் கட்டிப்பிடித்து அவரை மேலும் ஆத்திரம் அடையாமல் கட்டுப்படுத்தியுள்ளார்.

‘உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த இடத்தில் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்’ என அவரது காதில் நிக்கோலஸ் உரக்க கத்தியதன் பின்னர் வின்ஸ் நீய்ல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளார்.

பட்டப்பகலில் கேளிக்கை அரங்கிற்கு வெளியே உலகப் புகழ்பெற்ற ஹொலிவுட் நடிகர் ஒருவர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் வீகஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!!
Next post குளியலறையில் விபரீதம்: கொதிக்கும் வெந்நீரால் உடல் வெந்த 5 வயது சிறுவன்…!!