By 14 April 2016 0 Comments

புதிய ஒரு புத்தாண்டு பிறக்குமா? -நோர்வே நக்கீரா…!!

timthumbஎடுப்பார் கைப்பிள்ளை போல், கெடுப்பார் கைகளிலும் தமிழர்கள். வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு பருவகாலங்கள் அனைத்தும் சூரியன் பூமிக்கிடையிலுள்ள தொடர்புகளினால் நிர்ணயிக்கப்படுகிறது. பூமியில் சூரியனின் ஆதிக்கம் இடத்துக்கிடம் வேறுபட்டாலும் அவ்வித்தியாசங்கள் நாட்கள், கிழமைகள், மாதக்கணக்கில் வேறுபடுவதில்லை. அன்று ஒரு தைப்பொங்கல் ஒருவருடப்பிறப்பு இன்றோ இவை ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வேறாகக் காணப்படுவது ஏன்? எத்தர்களின் பிழைப்புவாதமே இது.

தமிழர்களுக்கு வருடப்பிறப்பு என்பது யாரோ ஒரு தனிமனிதனின் பிறந்தநாளை அல்லது இறந்த நாளை ஒட்டி ஏற்படுத்தப்பட்டதல்ல. மனிதன் பிறப்பதற்கு முன்னரே அண்டசராசரங்களின் தொகுதியில் ஏற்படும் மாற்றங்களைக் கணித்தே உருவானது. இன்று அதை பாப்பணர்களும், வந்தேறித் திராவிடர்களும் தமது சுயலாபங்களுக்காகவும் அரசியல் பிழைப்புக்காகவும் மாற்றி அமைக்க முயல்கின்றனர்.

இன்று 13.04.2016 வருடப்பிறப்பு என்று ஒருசிலரும், நாளைதான் வருடப்பிறப்பு என்று இன்னொரு சாராரும் தமக்கு ஏற்றாற் போல் கொண்டாடுகின்றனர். சிலர் சிறிலங்காவில் நாளை 14.04.2016 இலும் ஐரோப்பா, வட அமெரிக்காவில் 13.04.2016 என்றும் கூறுகின்றனர். மனிதர்களுக்கு ஏற்றால் போல் இயற்கை மாறுவதில்லை என்பதை அறிக. இயற்கைக்கு இசையவே மனிதன் வாழ்கிறான் என்பதைக் புரிந்து கொண்டு தமிழர்களுக்கு வருடப்பிறப்பு ஒன்றாகத்தான் இருக்க முடியுமே தவிர இரண்டாக இருக்க இயலாது என்பதை உணர்க. ஐரோப்பாவுக்கும் இலங்கை இந்தியாவுக்குமான நேரவித்தியாசம் மூன்றரை மணித்தியாலங்கள். மணித்தியாலக்கண க்கில் பார்த்தாலும் இலங்கையில்தான் முதலில் வருடப்பிறப்பு வரவேண்டும். ஏன் இவ்வருடம் வருடப்பிறப்பு ஐரோப்பால் முதல் பிறந்தது? ஏன் இந்தக் குளறுபடிகள்?

வருடப்பிறப்பு என்றால் என்ன? சூரியன் மேடராசியினுள் நுளையும் நேரம், காலமே வருடப்பிறப்பாகும். எதற்கு மேடம் என்று கேள்வியும் கூடவே வரலாம். சூரியனைச் சுற்றிவரும் பூமியின் ஒழுக்கு 12 கட்டங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளன. அவையே மாதங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஓருசுற்று முடிந்து மீனராசியில் இருந்து முதல் இராசியான மேடத்துக்குள் சூரியன் நுளையும் காலமே வருடப்பிறப்பு இதை இந்துக்கள், தமிழர்கள், பௌத்தர்கள், சிங்களவர்கள் அனைவரும் ஒரே நாளையே கொண்டாடுகிறார்கள். நாங்கள் பிரிந்து கிடந்தாலும் இயற்கை எம்மை இணைத்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையில் நாம் பாவித்த பஞ்சாங்கம் பரப்பரை பரம்பரையாக வந்த இரகுநாதரு டையது. ஆனால் இந்தியாவில் திருக்கணிதம் என்ற பஞ்சாகமே பாவிக்கப்பட்டு வந்தது. இப்பஞ்சாங்கங்களின் இடையிலுள்ள குளப்பமே தமிழர்களுக்கு பல வருடப்பிறப்புக்களும் தைப்பொங்கல்களுமாகும். இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? உ..ம் ஒருவர் எமது வீட்டுப்படலையினுள் நுளையும்போது குறிப் பிட்டவர் வந்துவிட்டார் என்பார்.மற்றவர் வீட்டுக்குள் வந்தபின்னரே அவர் வந்துவிட்டார் என்பார். ஆனால் இதற்கான காலப்பரிமாணம் அதிகமாக இருக்க முடியாது. இதற்குள் பாப்பணர்கள் தமது வசதிக்கேற்றால் போல் மக்களைக் குளப்ப அதைத் தமது அரசியலுக்குச் சாத்தியமாக மதமறுப்பாளர்களும் சில வந்தேறித் திராவிடக் கட்சிகளும் தம்வயிற்றுப் பிழைப்பைப் பார்க்கின்றனர்.

ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ், கலை, காலசாரம், சமய அறிவில் புலன் பெயர்ந்தே உள்ளனர். இனி அவர்களின் பிள்ளைகள் இவற்றை தொடர்ந்து கைப்பற்றுமா என்ற கேள்விகளுடனே புலத்தின் வாழ்வு நகர்கிறது. இதேபோல் மேலைநாடுகளின் மோகத்தில் இந்தியா நாறுப்படுகிறது. வெள்ளையனுக்குக் கள்ளத் தொடர்பில் பிறந்த பிள்ளைகளாகத் தம்மைக் கருதிக் கொண்டு சுயமிழந்து வாழ்கின்றனர். இந்தத் தெழிவின்மைக்குள் மற்றைய மதங்கள் தம்பங்குக்கு இவற்றைச் சுட்டிக்காட்டி மதம்மாற்றியும் விடுகின்றனர். அன்று அவர்கள் வந்து மாற்றினார்கள் இன்று இங்கு வந்து மாறுகிறோம்.

இதேபோன்றதுதான் தைப்பொங்கல் முரண்பாடுகளும். தைபொங்கல் எனும் உழவர் திருநாளை வருடப்பிறப்பு என்று கருக்கலைப்புக் செய்கிறார்கள். ஆனால் அதற்கான சரியான சிறந்த காரணங்களைச் சொல்வதில்லை. சனியின் ஆதிக்கத்திலுள்ள மகரராசியினுள் சூரியன் பிரவேசிக்கும் காலம் எப்படி வருடப்பிறப்பாக அமைய முடியும்? வள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து வருடம் கணிக்கிறோம் என்பவர்கள் பலர் உண்டு. வள்ளுவர் எப்போ பிறந்தார், இறந்தார் என்பதையே சரியாக நிரூபிக்க முடியாதவர்கள் வருடப்பிறப்பை எப்படிக் கணிப்பார்கள்? ஒரு தனிமனிதனுக்காக பூமி உருவானது இல்லை என்பதை அறிக. தையில்தான் வருடப்பிறப்பென்றால் ஐரோப்பியரின் தை முதலாம் திகதியிலேயே கொண்டலாமே. பின்பு எதற்கு தை 14ல் பொங்கிச் சூரியனுக்குப் படைக்கிறார்கள். ஆக சூரியனுக்கும் எமக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்பதை ஆதி தமிழன் உணர்ந்திருக்கிறான் என்பது புரிகிறதா?

தானியங்களுக்கு அதிபதியாக சனிபகவானே உள்ளார். அவரின் இராசியான மகரத்தினுள் சூரியன் பிரவேசிக்கும் நேரமே தைப்பொங்கல் ஆகும். இந்தக்காலத்திலே வெள்ளம் வற்றி பெரும்போக நெல் அறுவடை நடைபெறும். தானியங்களில் முக்கிய மானது நெல் என்பதை அறிந்திருப்பீர்கள். அதற்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகும். எந்தமாடு பிறந்த நாளை வைத்து இந்த மாட்டுப்பொங்கல் வருகிறது மதமதறு ப்பாளர்களே? ஆக உழவனின் உழவுக்கு உதவிய சூரியனுக்கும் மாட்டுக்கும் செய்யும் நன்றிக்கடனே இந்தத் தைப்பொங்கலும் மாட்டுப் பொங்கலும் ஆகும்.

தற்போது குளம்பிப்போயிருக்கும் தமிழ்சமூகத்தை ஒழுங்குபடுத்த இந்தப் பஞ்சாங்கங் களின் மூலகர்த்தாங்கள் இணைந்து ஒரு சரியான பஞ்சாங்கம் ஒன்றை உருவாக்குவது அவசியமாகிறது. ஊர்பிரிந்தால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போலவும், எரிகிறவீட்டில் மிஞ்சிய கொள்ளி மிச்சம் என்பது போலவும் வேற்று மதங்களும் மதமறுப்பாளர்களும் அரசியல் சுயலாபவித்தகர்களும் காத்திருக்கின்றனர். இந்த பஞ்சாங்க கர்த்தாக்கள் கூடி ஒரு முடிவை எடுத்து சமூகத்துக்குக் கொடுப்பதன் ஊடக மட்டுமே இளம்சமூகத்தின் சந்தேகங்களையும் கலை காலாசாரக் கடைப்பிடுப்புக்களையும் பேணலாம் என்பதை உணர்க.Post a Comment

Protected by WP Anti Spam