கேரளாவை உலுக்கிய இரட்டைக் கொலை: கள்ளக்காதல் ஜோடி குற்றவாளிகள் – 18–ந்தேதி தண்டனை அறிவிப்பு..!!

Read Time:3 Minute, 43 Second

images (3)திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல்லை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மனைவி விஜயம்மா (வயது 57). இவர்களின் மகன் லிஜேஸ். இவருக்கும் அனுசாந்தி என்பவருக்கும் கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் நடந்தது. 4 வயதில் சுவாஸ்திகா என்ற மகள் உள்ளார்.

அனுசாந்தி திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோ பார்க் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த நினோ மேத்யூ என்பவரும் வேலை பார்த்தார்.

ஒரே நிறுவனத்தில் பணி புரிந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இதில் அவர்களுக்கிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அனுசாந்தி, கணவர் மற்றும் உறவினர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டுக்கே அழைத்து உல்லாசமாக இருந்தார்.

அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த விவகாரம் அனுசாந்தியின் கணவர் லிஜேசுக்கு தெரிய வந்தது. அவர், மனைவியை கண்டித்ததோடு அவரை வேலைக்கு செல்லவும் தடை விதித்தார்.

இதனால் கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் தவித்த அனுசாந்தி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதனை கள்ளக்காதலன் நினோ மேத்யூவிடம் தெரிவித்தார். அவரும், லிஜேசை கொலை செய்ய ஒப்புக் கொண்டார். கடந்த 2014–ம் ஆண்டு ஏப்ரல் 16–ந்தேதி லிஜேசை கொலை செய்ய அவரது வீட்டிற்கு நினோமேத்யூ சென்றார்.

அப்போது வீட்டில் லிஜேசின் தாயார் விஜயம்மா மற்றும் 4 வயது மகள் சுவாஸ்திகா ஆகியோர் இருந்தனர்.

நினோ மேத்யூ, லிஜேசை தாக்கியபோது அவரை விஜயம்மா தடுத்தார். ஆத்திரம் அடைந்த நினோ மேத்யூ, விஜயம்மாவையும், அவரது பேத்தி சுவாஸ்திகாவையும் இரும்புகம்பியால் தாக்கி விட்டு தப்பியோடி விட்டார்.

இதில் மயங்கி விழுந்த லிஜேஸ், விஜயம்மா, சுவாஸ்திகா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு விஜயம்மா, சுவாஸ்திகா இருவரும் இறந்தனர். லிஜேஸ் உயிர் பிழைத்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில் ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நினோ மேத்யூ, அவரது கள்ளக்காதலி அனுசாந்தி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு திருவனந்தபுரம் வஞ்சியூரில் உள்ள செசன்சு கோர்ட்டில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

விஜயம்மா, சுவாஸ்திகா ஆகியோரை கொலை செய்த சம்பவத்தில் நினோ மேத்யூ, அனுசாந்தி இருவரும் குற்றவாளிகள் என இந்த கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களனி கங்கையில் மிதந்து கொண்டிருந்த குழந்தையின் சடலம் மீட்பு..!!
Next post தாயை மிருகத்தனமாக அடிப்பதை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை: குடிகாரத் தந்தை வெறிச்செயல்…!!