தாயை மிருகத்தனமாக அடிப்பதை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை: குடிகாரத் தந்தை வெறிச்செயல்…!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள துர்திப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்க்கான். மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போன இவர், தினந்தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை மிருகத்தனமாக அடித்து, உதைத்து, கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
நேற்றிரவும் மிதமிஞ்சிய குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார். இதை அவர்களின் மகனான ஃபைஸான்(20) தட்டிக் கேட்டு, தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அர்க்கான், வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து ஃபைஸானை கண்மூடித்தனமாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ஃபைஸான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமைறைவாக இருக்கும் அர்க்கானை தேடி வருகின்றனர்.