2007_2008_ம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியா ராக்கெட் அனுப்புகிறது

Read Time:2 Minute, 24 Second

indea-flag.gifவருகின்ற 2007_2008_ம் ஆண்டில் சந்திர கிரகத்திற்கு சந்திரயான்_1 ராக்கெட் அனுப்பப்படும் என்று இந்திய விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். சந்திர கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் இந்தியா நீண்டகாலமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா,சீனா,ரஷ்யா,ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்திரனுக்கு ராக்கெட்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வருகின்றன.

அதே மாதிரி இந்தியாவும் வருகின்ற2007_2008_ம் ஆண்டில் சந்திரனுக்கு சந்திரயான்_1 என்ற ராக்கெட்டை அனுப்பும் என்று இந்திய மூத்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் நகரில் சந்திரனில் ஆய்வும் பயன்பாடும் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் சந்திரயான்_1 ராக்கெட் திட்ட முதன்மை விஞ்ஞானியான நரேந்திர பண்டாரி கலந்துகொண்டு விரிவான முறையில் உரையாற்றினார். அப்போது மேற்கண்டவாறு கூறினார்.

சந்திரனில் உள்ள இரசாயன மாற்றங்கள் மற்றும் தாதுப்பொருட்கள் பற்றி இந்த ராக்கெட் தகவல் சேகரித்து அனுப்பும் என்றும் கடந்த 25 ஆண்டுகளாக சந்திரனைப் பற்றி ஆய்வு நடந்தாலும் அதைப்பற்றி இன்னும் 25 சதவீதம் கூட நம்மால் அறிய முடியவில்லை என்றும் விஞ்ஞானி பண்டாரி கூறினார்.

சூரிய மண்டலத்தில் இன்னும் அதிர்ச்சி அளிக்க்கூடிய வகையில் பல வினோதமான பொருட்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. சந்திரனை இன்னும் நெருக்கமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விஞ்ஞானி பண்டாரி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லெபனானில் 130 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
Next post பாகிஸ்தானிடம் 50 அணுகுண்டுகள் உள்ளன: அமெரிக்க பத்திரிகை பகீர் தகவல்