கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்ட யானை..!!

Read Time:1 Minute, 16 Second

16598_eleeசுவிட்ஸர் லாந்திலுள்ள மிருகக் காட்சிசாலையொன்றில் சக யானைகளால் தள்ளி வீழ்த்தப்பட்ட யானையொன்றை மீண்டும் நிற்க வைப்பதற்காக பாரந்தூக்கியை (கிரேன்) அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.

சூரிச் நகரிலுள்ள இந்த மிருகக்காட்சிச் சாலையில் உள்ள யானையை சக யானைகள் மோதி வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதனால், 49 வயதான மேற்படி யானை மீண்டும் எழுந்து நிற்க முடியாமல் திணறியது.

அதையடுத்து, சூரிச் நகர தீயணைப்புத் துறையினருக்கு மிருகக் காட்சிச்சாலை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். பின்னர், கிரேன் மூலம் அந்த யானை தூக்கி நிறுத்தப்பட்டது.

இந்த யானை 1958 ஆம் ஆண்டில் பூட்டானிலிருந்து கொண்டுவரப் பட்டது. சூரிச் மிருகக் காட்சிச்சாலையிலுள்ள மிக அதிக வயதான மிருகம் இதுவாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேடையில் மயங்கி வீழ்ந்த போதிலும் தொடர்ந்தும் அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதி..!!
Next post 72 வயதில் முதல் தடவையாக குழந்தை பெற்ற பெண்…!!