By 17 May 2016 0 Comments

மரணத்திற்காக கெஞ்சும் மகளின் பரிதாப நிலை: வீடியோ எடுத்து வெளியிட்ட தாய்…!!

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)மரணத்திற்காக கெஞ்சும் தனது மகளின் வாழ்க்கை போராட்டத்தை தாய் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Maidstone நகரை சேர்ந்த Kirsty(23) என்ற பெண், தனக்கு 12 வயது இருக்கையில் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த போது ஒரு வித பூச்சி அவரை கடித்துள்ளது.

அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட போதும், அவருக்கு பக்கவாதம் வந்துள்ளது,

மருத்துவர்கள் இதனை Lupus (தோல் நோய்) என கூறியுள்ளனர், இதனால் கடந்த 7 வருடங்களாக இதற்காக சிகிச்சைபெற்று வந்துள்ளார், ஆனால் தற்போது மருத்துவர்கள் இது தோல் நோய் கிடையாது, மர்மநோயாக உள்ளது என கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த6 மாதங்களாக Kirsty உடலில் தீவிர வலி ஏற்பட்டுள்ளது, 12 வயதில் இருந்தே இயல்பற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்த Kirsty- யின் வாழ்க்கை நிலை தற்போது மோசமடைந்துள்ளது.

Kirsty தனது தாயாரிடம், என்னால் வலி தாங்கமுடியவில்லை, மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன், சுவிஸ் தற்கொலை மையத்திற்கு என்னை அழைத்து செல்லுங்கள் என தினந்தோறும் கெஞ்சுகிறார்.

இதனை Kirsty -யின் தாய் Theresa வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார், அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Kirsty – யால் உயிர் வாழ்வற்காக காற்றினை தனது வாயால் உறிஞ்சுவதற்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்.

இதுகுறித்து தாயார் கூறுகையில், எனது மகளால் மருத்துவத்தை கூடசரியான முறையில் எடுத்துக்கொள்ள முடியவில்லை, வாந்தி, உடல் சோர்வு போன்றவையும் அவளை தொடர்வதால் எனக்கு மரணம் வேண்டும் என என்னிடம் கெஞ்சுகிறார்.

காலங்கள் கடந்துவிட்டது, என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை, அதனால் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன் என கூ றியுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam